இந்தியாவின் மொத்த எதிர்பார்ப்பும் போகுது பாருங்க-வைரலாகும் சந்திரயான் 2 வீடியோ.!
இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் சந்திரயான்-2 விண்கலத்தின், விக்ரம் லேண்டர் பற்றிய முழு விபர வீடியோ பதிவைப் பதிவு செய்துள்ளது. விக்ரம் லேண்டர் பற்றித் தெரியாத அனைத்து தகவல்களும், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் பற்றிய அனைத்து தகவல்களும் இந்த வீடியோவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நாளை நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்கத் தயாராக உள்ளது. அனைவரும் இந்த சாதனை நிகழ்வை நேரலை காணக் காத்திருக்கின்றனர். பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில், பிரதமர் மோடியுடன் தமிழக மாணவர்கள் உட்பட 70 பேர் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை நாளை நேரலையாக பார்வையிடுகின்றனர்.

லேண்டர் 'விக்ரம்' (ரோவர் 'பிரக்யன்' உள்ளே) செப்டம்பர் 7 ஆம் தேதி, அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் சந்திரனின் தென் துருவத்தில் உள்ள நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வைரலாகும் விக்ரம் லேண்டர் வீடியோ
இஸ்ரோ பதிவிட்டுள்ள அந்த வீடியோ பதிவு தற்பொழுது வைரலாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த வீடியோ பதிவு பதிவிடப்பட்ட ட்வீட்டின் கீழே, டிவிட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ நெட்டிசன்ஸ்களை வியப்பில் ஆழ்த்தி வலைத்தளம் முழுதும் வைரலாகி வருகிறது.

அப்படி என்ன சிறப்பாக இந்த வீடியோவில் இருந்தது என்றுதானே கேள்வி கேட்கிறீர்கள்? காரணம் உண்டு இவர் பதிவிட்ட அந்த வீடியோவில், பூமியிலிருந்து ஒரு கேமரா நிலவு நோக்கி ஜூமின் செய்கிறது, நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி கொண்டிருக்கும் சந்திரயான் விண்கலம் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் சந்திரயான் 2 தானா? என்பதே எங்களின் சந்தேகமா உள்ளது.
இந்த காரணத்தினாலேயே டிவிட்டர் பயணிகள் மற்றும் நெட்டிசன்ஸ்கள் இந்த வீடியோவைக் கண்டு வியந்து, எந்த கேமராவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று கமெண்ட் செய்து, வீடியோவை அதிகமாக ரீட்வீட் செய்தும், லைக் செய்தும் வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளம் மூலம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications