மகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.!

சங்கீத் என்ற நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடந்தது. அப்போது மகள் இஷா அம்பானியின் ஆசைக்கு இணங்க மனைவி நீட்டாவுடன் முகேஷ் அம்பானி டூயட் ஆடியது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

|

முகேஷ் அம்பானி-நீட்டா தம்பதியின் மகள் இஷா அம்பானி. இவருக்கு பிரபல தொழில் அதிபர் ஆனந்த் பிரமாலுக்கும் வரும் 12ம் தேதி திருமணம் நடக்கின்றது.

மகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.!

கடந்த சில தினங்களாக திருமண நிகழ்ச்சிகள் திருவிழாவை போல கலைகட்டியுள்ளது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், சங்கீத் என்ற நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடந்தது. அப்போது மகள் இஷா அம்பானியின் ஆசைக்கு இணங்க மனைவி நீட்டாவுடன் முகேஷ் அம்பானி டூயட் ஆடியது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

முகேஷ் அம்பானி குடும்பம்:

முகேஷ் அம்பானி குடும்பம்:

உலக கோடீஸ்வரர்களில் ஒருவராகவும், இந்திய கோடீஸ்வரர்களில் முதலிடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீட்டா. மகள் ஈஷா அம்பானி, ஆனந்த், ஆகாஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

ரிலையன்ஸ் என்ற தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் முகேஷ் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் இருக்கின்றன. தந்தை இறந்த பிறகு அனிலுக்கும் முகேஷ்கும் தொழில்களில் பங்கு பிரிக்கப்பட்டன. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உலக டாப் பணக்கார்களில் பட்டியில் இடம் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

காதலுக்கு பச்சை கொடி காட்டிய அம்பானி.!

மகள் இஷா அம்பானியும் பிரபல வைரத் தொழில் அதிபருமான ஆனந்த் பிரமால் ஆகியோர் காதல் விவகாரம் அம்பானிக்கு தெரியவர காதலுக்கு முதல் ஆளாக பச்சை கொடி காட்டினார்.

நிச்சயதார்த்த விழா:

இதையடுத்து, இத்தாலியில் கடந்த செப்டம்பர் 21 முதல் 23 வரை மூன்று நாள் நிச்சயதார்த்த விழா நடந்தது. இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
இதில், பாலிவுட் பிரபலங்கள் அமீர்கான், பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர் உள்ளிட்டோரும் ஹாலிவுட் பிரபலங்களான நிக்ஜோனஸ் மற்றும் ஜான்ஜென்ட் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

12ம் தேதி திருமணம்:

12ம் தேதி திருமணம்:

இஷாஅம்பானி-ஆனந்த் பிரமாலுக்கும் திருமணம் வரும் 12ம் தேதி இந்தியாவில் திருமணம் நடக்கின்றது. இரு வீட்டார் அழைப்புகளும் முடிந்து விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக திருவிழா போல நிகழ்ச்சி கலைகட்டியுள்ளது.

இதில் உலகத் அரசியல் வட்டார தலைவர்கள், ஹாலிவுட், பாலிவுட் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வருகின்றனர்.

ஹிலாரி கிளின்டன் வருகை:

ஹிலாரி கிளின்டன் வருகை:

அமெரிக்காவின் ஹிலாரி கிளின்டன் முதற்கொண்டு, திரையுலகம், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் உதய்பூர் வந்திருந்தனர். பல பிரபலங்கள் தனி விமானத்தில் வந்தனர். 8-ஆம் தேதி மட்டும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ஆயிரத்து 7 விமானங்களை மும்பை விமான நிலையம் கையாண்டுள்ளது.

டூயட் டான்ஸ் ஆடிய முகேஷ்-நீட்டா:

சனிக்கிழமையன்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியை கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினார். ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களும் நடனமாடினர். மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முகேஷ் அம்பானி, தமது மனைவி நீதா அம்பானியுடன் ஜப் தக் ஹை ஜான் ((Jab Tak Hai Jaan ))பாடலுக்கு நடனமாடினார்.

அசத்தல் நகைச்சுவை:

அசத்தல் நகைச்சுவை:

இதைத் தொடர்ந்து முகேஷ் ஜாக்சன் அம்பானி என பெயரை மாற்றிவிட்டதாக கரன் ஜோஹர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இரண்டாவது நாளாக ஞாயிறன்றும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

மேலும் அதிர வைக்கும் வீடியோக்கள்:

நிகழ்ச்சியின் வீடியோக்கள் அதிரவிட்டன.

தெறிக்கவிட்ட டான்ஸ்:

இதில் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி ஆடிய டான்ஸ் தெறிக்கவிட்டது.

நிகழ்ச்சி கலை கட்டியது:

நிகழ்ச்சியின் ஒர் விறுவிறுப்பான நடனம்

திரைப்பிரபலங்களுடன் ஆடிய முகேஷ்:

திரைப்பிரபலங்களுடன் ஆடிய முகேஷ் திருபாய் அம்பானி.

முகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.!

முகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.!

முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்;களில் ஒருவர், குறிப்பாக இவர் அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும்.குறிப்பாக இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளை அதிக நாட்கள் இந்நிறுவனம் மட்டுமே வழங்கியது. தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி அவர்கள் 44.3 பில்லியன் டாலருடன் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளார்,மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு விலை 1,099.8 ரூபாயாக அதிகரித்துள்ளது, குறிப்பாக முன்பை விட 1.6%
அதிகரித்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்1999 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஜாம்நகர் பகுதியில் திறக்கப்பட்டது, முகேஷ் அம்பானியின் கை படாத ஒரு வியாபாரமே இல்லை. இந்தியாவில் இருந்துகொண்டே உலக பெருநிறுவனங்களிடம் போட்டியிடும் அம்பானியின் திறமைகி அவரின் ஒரு சுத்திகரிப்பு நிறுவனம் சான்றாகும். குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள அந்த சுத்திகரிப்பு ஆலையானது, நாள் ஒன்றிற்கு 668000 பீப்பாய்கள் என்கிற கொள்ளவவை கொண்டுள்ளது. அதாவது இது உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும் என்று அர்த்தம்.

முகேஷ் அம்பானிக்கு இது ஒரு வெற்றியாக இருந்தது, அவர் இந்த சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கத்தை மேற்கொண்டபோது, ​​அது சவாலாக இருந்தது என்பதையும் உறுதி செய்தார்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

கடந்த 22 மாத காலத்திற்குள், ரிலையன்ஸ் ஜியோ 215 மில்லியன் வாடிக்கையாளர்களை திரட்டியது. இந்த வியத்தகு சாதனையானது எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்தினாலும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைதொடர்பு வட்டராத்தில் இப்போது வரை ஜியோ முதல் இடத்தை பிடித்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கலிஃபோர்னியா

கலிஃபோர்னியா

முகேஷ் அம்பானி கலிஃபோர்னியாவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தார், அந்த சமயம் அவரது
அப்பாவின் உடல்நிலை மிகவும் மோசமானதால் இந்தியாவிற்கு திரும்பினர். அம்பானி இங்கு வந்தபின்பு பாலியஸ்டர் ஃபில்மென்ட் யார்ட் (PFY) உற்பத்தி ஆலையை திறந்தார்.

முகேஷ் அம்பானி உலகின் மிக விலை உயர்ந்த வீடு

முகேஷ் அம்பானி உலகின் மிக விலை உயர்ந்த வீடு

மும்பையில் அம்பானி குடும்பத்தின் பெரிய வீடு 400,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது, இதன் மதிப்பு 2 பில்லியன் டாலர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக விலை உயர்ந்த வீடு ஆகும்.

ஆண்டு வருமானம்

ஆண்டு வருமானம்

முகேஷ் அம்பானியின் ஆண்டு வருமானம் ரூ.15 கோடி ஆகும். உடனே வாயை பிளக்க வேண்டாம். இன்னொரு விஷயத்தையும் கேளுங்கள். இந்த சம்பளம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. முகேஷ் அம்பானியின் நிறுவனமானது, இந்தியாவின் மொத்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 5மூ பங்களிப்பு ஆட்கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் நிலவரப்படி அம்பானி நிறுவனத்தின்
மதிப்பு சுமார் 110 பில்லியன் டாலர்கள் ஆகும்.

ஒரு குடும்பத்துக்கு 600 வேலையாட்கள்.!

ஒரு குடும்பத்துக்கு 600 வேலையாட்கள்.!

உலகின் மிக விலையுயர்ந்த குடியிருப்புக்கான சொந்தகாரமும் நம்ம அம்பானி தான். தெற்கு
மும்பையில் அமைந்துள்ள அவரின் வீட்டின் பெயர் அன்டிலியா ஆகும். மொத்தம் 27 மாடிகள் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் 600-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நிக் நேம்:

நிக் நேம்:

முகேஷ் அம்பானியின் என்னவென்றால் முகு என்று தான் அழைப்பார்களாம், மேலும் அவர் வாழ்க்கையில் மதுவை ருசித்ததில்லை.பின்பு சைவ உணவை அதிகம் விரும்புவார் அம்பானி, அதன்படி டால்-ரோட்டி மற்றும் பருப்பு, அரிசி
சப்பாத்தி போன்றவற்றை எடுத்துக்கொள்வார்.

Best Mobiles in India

English summary
isha ambanis pre wedding function video goes viral on social media : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X