ஐபோனை திருடி பேஸ்புக்கில் தனது படத்தை போட்ட திருடன்!!!

Posted By:

வாசிங்டனை சேர்ந்த ஜென்னி ஆலன் என்பவர் ஒரு லைபரரி சம்மந்தமாக வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது அவரது ஆப்பிள் ஐபோன் எதிர்பாராத விதமாக திருடு போனது.

அந்த ஐபோனில் அவரது பெர்ஷ்னல் தகவல்கள், வேலை சம்மந்தபட்ட விஷியங்கள், பெர்ஷ்னல் இமெயில் மற்றும் குழந்தைகளின் படங்கள் இவை அனைத்தும் இருந்ததாம். இந்த தகவல்கள் தவறாக பயன்படுத்த படுமோ என்ற வருதத்தில் ஜென்னி ஆலன் இருந்தார்.

ஐபோனை திருடி பேஸ்புக்கில் தனது படத்தை போட்ட திருடன்!!!

சிறிது நேரத்தில் இவரது நண்பர் இவரிடம், திருடன் உங்களுது பேஸ்புக் பக்கத்தில் தனது படத்தை போஸ்ட் செய்ததாக கூறினார். திருடன் அவனது அக்கவுன்ட் என நினைத்துக்கொண்டு இவரது பேஸ்புக் அக்வுன்ட் மூலம் படத்தை போஸ்ட் செய்திருக்கிறான் என்று ஜென்னி ஆலன் வெப்சைட் கிங்5 எனும் லோக்கல் நியுஸ் வெப்சைடில் தெரிவித்துள்ளார்.

ஜென்னி ஆலனின் நண்பர் அந்த திருடனின் படத்தில் "செல்போன் திருடன்" என எழுதி பேஸ்புக்கில் அப்லோட் செய்தார். சிறிது நேரத்தில் இந்த படம் பலரால் பேஸ்புக்கில் பலரால் ஷேர் செய்யப்பட்டது. இது வைரலாக பேஸ்புக்கில் பரவியது. நிறைய பேர் தங்களுது டைம்லைனில் இதை ஷேர் செய்தார்கள்.

பேஸ்புக்கில் உள்ள கம்மியுனிட்டி மெம்பர்களும் திருடனின் படத்தை போஸ்ட் செய்தனர். பேஸ்புக்கில் திருடனின் படம் இவ்வளவு வைரலாக பரவியும் லோக்கல் போலீஸால் அந்த திருடனை இன்னும் பிடிக்க முடியவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்