2,100 ஆண்டு பழமையான 'ஐபோன்' போன்ற பொருள் பெண்ணின் எழும்புக்கூடுடன் கண்டுபிடிப்பு! - வீடியோ

|

சயான் கடலுக்கு அடியில் உள்ள ஆலா-டே-நெக்ரோபோலிஸ் ( Ala-Tey necropolis) என்ற பகுதியில், சுமார் 2137 வருடப் பழைமையான பெண்ணின் படிமத்தில் இருந்து 'ஐபோன்' போன்ற அசாதாரணமான ஒரு பொருளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நீர்த்தேக்க அணையில் பொக்கிஷம்

நீர்த்தேக்க அணையில் பொக்கிஷம்

சைபீரியன் டைம்ஸின் அறிக்கையின்படி, இந்த படிமம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் ரஷ்யாவில் உள்ள சயனி சுஷென்ஸ்காயா (Sayani Shushenskaya) என்ற அணைக்கு அருகில் உள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நீர்த்தேக்க அணை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2137 வருட எழும்புக்கூடு கண்டுபிடிப்பு

2137 வருட எழும்புக்கூடு கண்டுபிடிப்பு

இந்த அணை, அதன் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்துடன் அமைந்துள்ளது. வழக்கமாக, இந்த அணையில் சுமார் 56 கண அடி நீர் சேமித்திருக்கப்படும். ஆனால் கோடைக் காலத்தில் மட்டும், இதில் உள்ள தண்ணீர் தற்காலிகமாக வெளியேற்றப்படும். அப்போதுதான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் ஆராய்ச்சியைத் துவங்கி 2137 வருட படிமத்தை கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியர்களும் தமிழர்களே அடித்த கூறும் அறிவியல் ஆதாரங்கள்! இந்தியை திணிக்காதீர்கள்.!

சியோங்னு பேரரசு சாம்ராஜ்யத்தின் மக்கள்

சியோங்னு பேரரசு சாம்ராஜ்யத்தின் மக்கள்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள 'ஐபோன்' போன்ற பொருள், கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 1ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதி அதிக அளவிலான மக்கள் தொகையுடன் சியோங்னு (Xiongnu) பேரரசு சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இது என்ன தெரியுமா?

உண்மையில் இது என்ன தெரியுமா?

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள 'ஐபோன்' போன்ற பொருள், குறிப்பாகக் கருப்பு ரத்தின ஜெட் பாறையால் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் விலைமதிப்பற்ற முத்துக்களும், நவரத்தினங்களும் கல் படிவத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பு ஸ்லாப் உண்மையில் ஒரு பெல்ட் பக்கிள் என்று ஆராய்ச்சியளர்கள் தெரிவித்துள்ளனர்.

சன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்: கூடுதல் சலுகை.!

ஐபோன் போன்று இருக்கும் கல்

ஐபோன் போன்று இருக்கும் கல்

சுமார் 2137 வருடப் பழைமையான பெண்ணின் படிமத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அசாதாரணமான பெல்ட் பக்கிள் வடிவம், ஐபோன் போன்று உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதனால் தான் இந்த பொருளை ஐபோன் என்று கூறியுள்ளனர்.

பிரீமியம் குவாலிட்டி மொபைல் கேஸ்

பிரீமியம் குவாலிட்டி மொபைல் கேஸ்

டர்க்கைஸ், கார்னிலியன், முத்து போன்ற வண்ண நிறக் கற்களை பயன்படுத்தி இந்த அசாதாரணமான பெல்ட் பக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு பிரீமியம் குவாலிட்டி ஐபோன் கேஸ் போன்று இருக்கிறது என்றும், இதனுடன் பண்டைய சீன நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.!

யார் இந்த நட்டாஷா?

யார் இந்த நட்டாஷா?

தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர். பாவெல் லியூஸின் கூற்றுப்படி, 2137 வருடப் பழமை வாய்ந்த பெண்ணின் படிமத்திற்கு 'நட்டாஷா' என்று பெயரிடப்பட்டுள்ளது. நட்டாஷாவின் படிமம் ஹுனு இரா(Hunnu-era (Xiongnu) சகாப்தத்துடன் சேர்ந்தது என்றும், இத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய சீன நாணயங்களை வைத்து தான் நட்டாஷாவின் வயது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இரண்டு 2137 வயது கொண்ட மம்மிகள் கண்டுபிடிப்பு

மேலும் இரண்டு 2137 வயது கொண்ட மம்மிகள் கண்டுபிடிப்பு

நட்டாஷாவின் படிமத்துடன் மேலும் இரண்டு மம்மிகள்- பதப்படுத்தப்பட்ட படிமங்களின் எலும்புகளும் கிடைத்துள்ளது. இந்த உடல் படிமங்களுடன் அவர்கள் முந்தைய காலத்தில் பயன்படுத்திய, அவர்களின் தினசரி கருவிகளுடன் புதைக்கப்பட்டுள்ளது என்பது சுவாரசியம். அவர்களுடன் புதைக்கப்பட்டுள்ள கருவிகளை கொண்டு அவர்கள் அக்காலத்தில் என்ன வேலை செய்து வந்துள்ளனர் என்பது சரியாக கணிக்கப்பட்டுள்ளது.

லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்! பட்ஜெட் விலையில் அறிமுகம்!

கண்டுபிடிக்கப்பட்ட 'ஸ்லீப்பிங் பியூட்டி'

கண்டுபிடிக்கப்பட்ட 'ஸ்லீப்பிங் பியூட்டி'

நட்டாஷாவுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு படிமங்களில் ஒன்று 'ஸ்லீப்பிங் பியூட்டி' என்று ஆராய்ச்சியாளர்களால் பெயரிடப்பட்டுள்ளது. இப்படி ஒரு பெயரை இந்த படிமத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் ஏன் சூட்டினார்கள் என்பதற்கான காரணம், இந்த பெண்ணின் படிமம் முற்றிலும் பட்டு உடையால் காணப்பட்டது என்பதனால் தானாம்.

இவர் பாதிரியார் இல்லை என்ற உண்மைக்கான காரணம்

இவர் பாதிரியார் இல்லை என்ற உண்மைக்கான காரணம்

முதலில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 'ஸ்லீப்பிங் பியூட்டி' படிமத்தில் உள்ள பெண் ஒரு பாதிரியார் என்று கருதியுள்ளனர். ஆனால், பின்னர் ஆராய்ச்சியாளர்கள் பெண்ணின் படிமத்துடன் தோல் கலை கருவிகளைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அவர் உண்மையில் பாதிரியார் இல்லை என்றும், அக்காலத்தில் வாழ்ந்த ஒரு தோல் (Leather) வடிவமைப்பாளர் என்றும் பின் கண்டுபிடித்துள்ளனர்.

அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய சாதனம்.!

நெசவாளரின் எலும்புக்கூடு

நெசவாளரின் எலும்புக்கூடு

அதேபோல், நட்டாஷா மற்றும் ஸ்லீப்பிங் பியூட்டி உடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இன்னொரு பெண்ணின் படிமம், நிச்சயம் ஒரு நெசவாளரின் எலும்புக்கூடு தான் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படத் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம், அந்த படிமத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட 2137 வருடப் பழமையான நூல் சுழல் மற்றும் தையல் பைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லறை கொள்ளையர்களிடமிருந்து தப்பியது எப்படி?

பண்டைய 'கல்லறை கொள்ளையர்'கள் இடமிருந்து, இந்த பணக்கார ஹன் நாடோடிகளின் படிமங்கள் எப்படிப் பாதுகாக்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் இவை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நம்ப முடியாத அதிர்ஷ்டம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதேபோல் இந்த பகுதியில் இன்னும் ஏராளமான சுவாரசிய படிமங்களைத் தேடி அவர்களின் ஆராய்ச்சியைத் துவங்கியுள்ளதாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
iPhone-Like Stone Buried With A Woman Over 2,100 Years Ago Is Found By Archaeologists : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X