Home
Social media

மோடியுடன் நீரடி சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம்! இந்திய ரயில்வே வெளியிட்ட புதிய வீடியோ!

இந்தியாவின் முதல் நீரடி சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும், என்று பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.

மோடியுடன் நீரடி சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் அறிமுகம்!

பிரதமர் நரேந்திர மோடியை உள்ளடக்கிய இந்திய ரயில்வே வீடியோவில் நீரடி சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

முதல் நீரடி மெட்ரோ ரயில் திட்டம்

முதல் நீரடி மெட்ரோ ரயில் திட்டம்

இந்தியாவில் முதல் நீரடி மெட்ரோ ரயில் திட்டம் கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் கீழ் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒரு புதிய வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய ரயில்வேயின் முன்னேற்றத்தின் அடையாளம்

நீரடி மெட்ரோ ரயில் திட்டம் சிறந்த பொறியியலுக்கு எடுத்துக்காட்டு என்றும், இந்த நீரடி மெட்ரோ ரயில் திட்டம் இந்திய ரயில்வேயின் முன்னேற்றத்தின் அடையாளம் என்றும் அவர் ட்வீடில் தெரிவித்திருக்கிறார். கூடுதலாக இந்த நீரடி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் கொல்கத்தா குடியிருப்பாளர்கள் வசதியாக இருப்பார்கள், மேலும் நாடு பெருமிதம் கொள்ளும் என்று கோயல் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

16 கி.மீ. இயக்கப்படும் மெட்ரோ ரயில் பாதை

16 கி.மீ. இயக்கப்படும் மெட்ரோ ரயில் பாதை

இந்த மெட்ரோ ரயில் பாதை கொல்கத்தா மெட்ரோ லைன் 2 என்று அழைக்கப்படும் கிழக்கு-மேற்கு மெட்ரோ லைனின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதை இரண்டு கட்டங்களாக சுமார் 16 கி.மீ. தூரத்திற்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சால்ட் லேக் மெட்ரோ பாதை

சால்ட் லேக் மெட்ரோ பாதை

முதல் கட்டமாக, சால்ட் லேக் செக்டர் 5 நிலையத்திலிருந்து, சால்ட் லேக் ஸ்டேடியம் நிலையத்துடன் இந்த பாதை இணைக்கும் என்றும், இந்த பாதை சுமார் 5 கி.மீ. நீளம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த லைன் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 60 வினாடி மெட்ரோ சவாரி

60 வினாடி மெட்ரோ சவாரி

இந்த புதிய நீரடி மெட்ரோ பாதை பயணிகளின் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் உள்ள நீரடி மெட்ரோ லைன், சால்ட் லேக் செக்டர் 5 நிலையத்தை ஹவுரா மைதான நிலையத்துடன் இணைக்கும், ஹூக்ளி ஆற்றின் கீழ் உள்ள நீரடி மெட்ரோ சவாரி சுமார் 60 வினாடிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மெனி போரிங் இயந்திரங்கள்

ஜெர்மெனி போரிங் இயந்திரங்கள்

ஆற்றின் அடியில் மெட்ரோ சுரங்கங்களின் கட்டுமானம் ஏப்ரல் 2017 ஆம் ஆண்டில், ஹவுரா கரையின் முடிவில் தொடங்கியது. நீரடி சுரங்கங்கள் 520 மீட்டர் நீளமும் சுமார் 30 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியிலிருந்து கொண்டுவரப்பட்ட ராச்னா மற்றும் பிரேர்னா என்ற இரண்டு உயர்மட்ட சுரங்கப்பாதை போரிங் இயந்திரங்களால் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு

விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு

இந்த நீரடி சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் திட்டம் இந்த மாதத்தின் இறுதிக்குள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது கொல்கத்தாவில் வடக்கு-தெற்கு மெட்ரோ என்று அழைக்கப்படும் ஒரு மெட்ரோ பாதை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Introducing Underwater Subway Metro Rail Project with Modi Indian Railway Releases New Video : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X