பூங்காவை சுத்தப்படும் காகங்கள்: மனிதர்கள் கூட செய்யாத வேலை.!
மனிதன் நிர்வாணமாய் இருந்தான் இயற்கை மானத்தோடு இருந்தது. மனிதன் நாகரீகம் அடைந்தான் இயற்கை நிர்வாணம் ஆனது என்ற கவிதையை எப்போதும் மறுக்கவும் முடியாது மாற்றவும் முடியாது. மனித இனத்தால் தான் இயற்கைக்கு பல்
மனிதன் நிர்வாணமாய் இருந்தான் இயற்கை மானத்தோடு இருந்தது. மனிதன் நாகரீகம் அடைந்தான் இயற்கை நிர்வாணம் ஆனது என்ற கவிதையை எப்போதும் மறுக்கவும் முடியாது மாற்றவும் முடியாது.

மனித இனத்தால் தான் இயற்கைக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

மனித இனத்தால் சிக்கல்:
மனிதனின் அன்றாட சொகுசு வாழ்க்கைக்காக இயற்கையை தினமும் நரபலி கொடுத்து வருகின்றனான். குளோரோ புளோரோ கார்பன், வேதி புகைகள் வெளியாகி ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுத்தியுள்ளன. வீடுகளில் இருந்து வெளியாகும் நச்சு புகைகளாலும், புவி வெப்பமயம் ஆகிவருகிறது. இதை தடுக்க மனிதன் ஒரு சில நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதை செயல்படுத்துவதில் மனிதர்களிடையே பாகுபாட்டு ஏற்பட்டுள்ளது.

பூங்காவில் குப்பை:
மனிதர்கள் வந்து செல்லும் இடமாக பூங்கா இருக்கின்றது. இயற்கையோடு சேர்ந்து இருக்கும் போது, மன நிம்மதியும் நிறைவும் கிடைக்கிறது. இந்நிலையில், அங்கு ஜோடியோடோ இல்லை. தனியாகவோ, இல்லை குடும்பத்துடனோ வரும்போது, அவர்கள் தின்பண்டங்கள் சாப்பிடும் போது, அதன் பிளாஸ்டிக் கவர்களையும், சிகரெட், துண்டு, பிளாஸ்டிக் தட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விட்டு சென்று விடுகின்றனர். இதனால் பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்தும், பூமியில் புதையுண்டு இருப்பதால், மழைநீரும் பூமிக்கு செல்வதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. மேலும் சிறுசிறு பிளாஸ்டிக்கழிவு பொருட்கள் காய்வாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அடைப்பு ஏற்படுத்துகின்றது. இதனால் விரைவாக மழைநீர் செல்லாமல் சிக்கல் ஏற்படுகிறது.

மாற்று சிந்தனை கொண்ட பிரான்ஸ்:
பிரான்சிஸ் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க புய் டு போ பூங்காக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிகரெட் துண்டு சிகரெட் துண்டுகள், சாக்லேட் தாள் போன்ற சிறிய ரக குப்பைகளை போட்டுச் செல்வதால் அது காற்றில் பறந்து பூங்காவை அசுத்தப்படுத்தியது. இவற்றை சுத்தம் செய்வது பூங்கா நிர்வாகத்துக்கு மிகுந்த சவாலாகவே இருந்தது. எனவே இப்பணிகளை செய்ய காகங்களை ஈடுபடுத்த பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.

காகங்ககாகங்களுக்கு பயிற்சி:
தற்காக 6 காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சிறிய குப்பைகளை சேகரித்து குப்பைத் தொட்டியில் போடும் காகத்திற்கு பரிசாக அதற்கு தேவையான உணவு வழங்கப்படுகிறது. அந்த காகங்கள் திறம்பட தனது வேலைகளை செம்மலே செய்து முடிக்கின்றன.

சுற்றுச்சூழலை கற்றுத்தரும் பாடம்:
இது குறித்து பூங்கா நிர்வாக இயக்குனர் நிகோலஸ் டி வில்லியர்ஸ் கூறுகையில், பூங்காவை சுத்தம் செய்யும் நோக்கிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் இதனை கருத்தில் கொண்டு பூங்காவை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவ வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை நமக்கு கற்றுத்தரும் பாடம் தான் என்று கூறினார். மேலும் இந்த படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications