வேகமாக வளரும் இந்தியாவின் குப்பை 'மவுண்ட் எவரஸ்ட்' ! விமான எச்சரிக்கை விளக்கு வேண்டுமாம்...

|

லண்டன் பிரிட்ஜ் கோபுரங்களை விட உயரமாக புதுடெல்லியின் காஷிப்பூர் குப்பைக்கிடங்கு திடுக்கிட வைக்கும் வேகத்தில் தொடர்ந்து வளர்ந்துவருகிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள்ளாக, நாட்டின் மிக முக்கியமான நினைவு சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹால்-ஐ விட அதிகமாக உயரவுள்ளது.

வேகமாக வளரும் இந்தியாவின் குப்பை 'மவுண்ட் எவரஸ்ட்' !

உள்ளூர் மக்களால் 'மவுண்ட் எவரெஸ்ட்' என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் இந்த துர்நாற்றம் வீசும் குப்பைக்கிடங்கு ஏற்கனவே பரந்துவிரிந்து 65 மீட்டர் (213 அடி) உயரத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்தியாவின் உச்சநீதிமன்றம் சமீபத்தில் எச்சரித்தது போல இங்கு விமான எச்சரிக்கை விளக்குகள் பொருத்துவதும் இன்னும் நடைபெறவில்லை.


1984 ஆம் ஆண்டில் காஷிப்பூர் முதல் முறையாக திறக்கப்பட்ட போது நிச்சயமாக ஒருபோதும் இவ்வாறு நடக்கும் என்ற எண்ணம் இல்லை. 2002 ஆம் ஆண்டிலேயே குப்பைக்கிடங்கு அதன் கொள்ளளவான 20 மீட்டரை அடைந்தவுடன், இது மூடப்பட்டிருக்க வேண்டும். இன்று புதுதில்லியில் வசிக்கின்ற 21 மில்லியன் மக்களும் , வளர்ந்துவரும் இந்த அசுரமலை மற்றும் மற்ற இரண்டு குப்பைக்கிடங்குகளையுமே முக்கியமாக நம்பியுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் குறைந்தபட்சம் ஒரு தசாப்தத்திற்கு முன்பாகவே தங்களது அதிகபட்ச அளவை கடந்துவிட்டன.

வேகமாக வளரும் இந்தியாவின் குப்பை 'மவுண்ட் எவரஸ்ட்' !

"சுமார் 2,000 டன் குப்பைகள் ஒவ்வொரு நாளும் காஷிப்பூரில் கொட்டப்படுகின்றன" என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத டெல்லி மாநகராட்சி அதிகாரி. இந்த அளவு குப்பையை குவிப்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மீட்டர் வளர்ச்சி அடைகிறது இந்த குப்பை மலை.

இது குப்பையின் பெரிய நிலப்பகுதி மட்டுமல்ல, மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒன்று; பல சந்தர்ப்பங்களில் கிழக்கு டெல்லி நகராட்சி கழகம் (EDMC) இக்குப்பை கிடங்கை மூடும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

கடந்த ஆண்டு அதிகாரிகளின் மனநிறைவு அபாயகரமானதாக மாறியது. கடும் மழையின் காரணமாக குப்பைமலையின் ஒரு பகுதி சரிந்து இரண்டு உள்ளூர்வாசிகள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக குப்பைக்கிடங்கை மூடுதல் மற்றும் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தில் (EPA) இருந்து குப்பைக்கிடங்கு மறுவாழ்வு பகுப்பாய்வு ஆகியவற்றிற்கு வழிவகுத்தது.

"கழிவு அகற்றும் நடைமுறைகள் நன்கு கட்டுப்படுத்தப்படாததால், செங்குத்தான மற்றும் நிலையற்ற சரிவுகளை உருவாக்குவதற்கு வழிவகுத்தது" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கழிவுப்பொருட்களில் தீ பிடித்தல், கழிவுப்பொருட்களை மேற்பரப்பில் இருந்து புகை வெளியாகுதல், விலங்குகளின் கழிவுகள் மற்றும் குப்பை மறுசுழற்சியில் சரியான முறையை பின்பற்றாதது ஆகியவை நவம்பர் 2017ல் சோதனையின் போது கவனத்தை பெற்றன." இதற்கான தீர்வு எளிதானது: குப்பைக்கிடங்கு மேற்பரப்பில் நிரப்பப்பட்ட குப்பைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் மற்றும் மாநகராட்சி காஜிப்பூர் தளத்தை மூடிவிட்டு விரைவாக ஒரு புதிய குப்பைக்கிடங்கை திறக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Indias Mount Everest of Trash Is Growing So Fast It Needs Aircraft Warning Lights : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X