இந்தியாவில் அதிகரிக்கும் ஃபேஸ்புக் மோகம்!

Posted By: Staff

சமீபத்தில் இந்தியாவில் ஆன்லைனைப் பயன்படுத்துபவர்கள் பற்றிய ஒரு ஆய்வை வெப் ரிசேர்ச் பர்ம் காம்ஸ்கோர் எடுத்தது. அந்த ஆய்வின்படி கூகுள் வெப்சைட்டுகள் இந்தியர்களின் சொர்க்கபுரியாக இருக்கிறது. அதாவது இந்தியர்கள் கூகுள் வெப்சைட்டுகளை பெரும்பான்பான்மையாகப் பயன்படுத்துவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

மேலும் ஆன்லைனில் இருக்கும் போது 25.2 சதவீத பொழுதை சமூக வலைத்தளத்தில் இந்தியர்கள் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. அதோடு இணைய தளத்தைப் பயன்படுத்தும் இந்தியர்களில் 95 சதவீதம் பேர் கூகுள் வெப்சைட்டுகளைப் பயன்படுத்துவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் அதிகரிக்கும் ஃபேஸ்புக் மோகம்!

இந்த ஆய்வின்படி இந்தியாவில் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட 57.8 மில்லயன் பேர் கூகுள் வெப்சைட்டுகளைப் பயன்படுத்தி இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

பேஸ்புக்கைப் பொருத்தவரை அது ஒரு மிகப் பெரிய சமூக வளைத்தளமாக இருந்து வருகிறது. இந்த பேஸ்புக்கை 50.9 மில்லியன் இந்தியர்கள் அதாவது 83.4 சதவீதம் பேர் பயன்படுத்தி இருக்கின்றனர். அதற்கடுத்து யாகூ சைட்டுகளை 65.5 சதவீதம் பேரும் மைக்ரோசாப்ட் வெப்சைட்டுகளை 4801 சதவீதம் பேரும் பயன்படு்ததியிருக்கின்றனர் என்ற அந்த ஆய்வு கூறுகிறது.

குறிப்பாக இந்த சர்வே சமூக வளைத்தளங்களைப் பயன்படுத்துவோரைப் பற்றிய ஆய்வில் அதிக அக்கறை காட்டியது. அதன்படி பார்த்தால் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வளைத்தளம் பேஸ்புக் என்று தெரிகிறது. அதாவது கடந்த ஜூன் மாதம் மட்டும் ஆன்லைனைப் பயன்படுத்தும் இந்தியர்கள் மொத்தம் 4 மணி நேரம் இந்த பேஸ்புக்கைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.

அதோடு பேஸ்புக்கில் 25.5 சதவீத நேரத்தை இந்தியர்கள் செலவிட்டிருக்கின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது. மற்ற பொழுதுபோக்கு வெப்சைட்டுகளுக்கு 10 சதவீத நேரத்தை ஒதுக்கி இருக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot