இந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா".!
குறிப்பாக பல நாடுகள் தங்களது கரன்சி தேவை அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றை மேற்கத்திய நிறுவனங்கள் மூலமாக பூர்த்தி செய்து வகையில் உள்ளது.
தற்சமயம் இந்திய ரூபாய் நோட்டுகளை சீனாவில் அச்சடிக்கப்பட உள்ளதாக சீன நாளிதல் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. பல வருடங்களாக வெளிநாடுகளின் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் சந்தையை மேற்கத்திய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இன்னும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

குறிப்பாக பல நாடுகள் தங்களது கரன்சி தேவை அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றை மேற்கத்திய நிறுவனங்கள் மூலமாக பூர்த்தி செய்து வகையில் உள்ளது. இப்போது சீனா கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் சந்தையில் கால்பதிப்பதன் மூலம் சர்வதேச
அளவில் தனது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ளும் என்று பெரிதும் கருதப்படுகிறது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்:
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தி என்னவென்றால், சீனா தற்சமயம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இந்நிலையில் பல நாடுகளின் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை சீனா துவங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற விவாதங்கள்
மேலும் இந்த விஷயத்தை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று சில நாடுகள் கோரியுள்ளதாகவும், அவ்வாறு வெளிப்படுத்தினால்
தங்கள் நாட்டில் தேவையற்ற விவாதங்கள் எழும் என்றும் அந்நாடுகள் தெரிவித்துள்ளதாகவும் நாளிதழில் கூறப்பட்டுள்ளது.

லீ கீஷெங்
குறிப்பாக இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக சீன ரூபாய் அச்சடிப்பு மற்றும் நாணய உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநர் லீ கீஷெங் கூறியது என்னவென்றால் பல ஆண்டுகளாக வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சீன அச்சடித்ததில்லை,ஆனால்,இந்த நிலைப்பாட்டில் 2015-ஆகம் ஆண்டு மாற்றம் ஏற்ப்பட்டது.

இந்தியா
தற்சமயம் இலங்கை, மலேசியா,வங்கதேசம், பிரேசில், தாய்லாந்து,இந்தியா, போலந்து, உள்ளிட்ட நாடுகளின் ரூபாய் நோட்டுகளை பெரிய அளவில் அச்சடிப்பது தொடர்பான ஒப்பந்தங்களை சீனா பெற்றுள்ளது என்று லீ கீஷெங் கூறியுள்ளார்.

சசி தரூர்
மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார். பின்பு அவர் கூறியது, உள்நாட்டு பாதுகாப்பில் பல்வேறு குழப்பமான நலை ஏற்படும்,மேலும் பாகிஸ்தான் கூட கள்ளநோட்டு தயாரிப்பில் ஈடுபடும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications