விசிட்டிங் கார்டை நட்டுவச்சா செடி வளரும் அதிசயம்! நெட்டிசன்ஸ்கள் பாராட்டு!

|

இந்திய வன சேவை அதிகாரி பிரவீன் கஸ்வான், கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் வனவிலங்கு வீடியோக்களையும், காட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது டிவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவரின் சமீபத்திய பதிவு நெட்டிசன்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரின் ஐடியா பிரமிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு நல்ல பாடத்தைப் புகட்டியுள்ளது.

காட்டு யானை

அவரது சமீபத்திய வீடியோவில் தமிழகத்தின் நீலகிரியில் உள்ள வன அதிகாரிகள் பள்ளத்தில் சிக்கிய கரடியை மீட்பதைக் காட்டியது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஒரு காட்டு யானை அதன் அருகில் தரையிலிருந்து கழிவு காகிதத்தை எடுத்து அருகில் இருக்கும் கறுப்பு டஸ்ட்பினுக்குள் போடும் வீடியோ காட்சி கூட அவரின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இவருடைய பல தகவல்கள் சமீபகாலமாக வைரல் ஆகிவருகிறது.

 விசிட்டிங் கார்டின் புகைப்படம்

திங்களன்று, கஸ்வான் விலங்குகள் குறித்த தனது வழக்கமான இடுகைகளிலிருந்து ஓய்வு எடுத்து வேறு ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். அவர் தனது தனிப்பட்ட விசிட்டிங் கார்டின் புகைப்படத்தைப் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று பகிர்ந்துள்ளார், இது கடினமான காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு காகித அட்டை. இதில் அட்ரஸ் விபரங்கள் அல்லது போன் விபரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை, வெறும் அவரின் பெயர் மற்றும் இமெயில் ஐடி உடன் வருகிறது.

30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!

துளசி செடி

கஸ்வானின் கைகளில் காணப்படும் விசிட்டிங் கார்டின் கீழ் பகுதியில், "இந்த கார்டை மண்ணில் நடும்போது இது ஒரு பிரகாசமான துளசி செடியாக வளரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என்னது விசிட்டிங் கார்டை புதைத்து வைத்தால் செடியாக வளருமா? என்று தானே யோசிக்கிறீர்கள். உண்மையில் அப்படி தான் இந்த அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு உறுதியான காகிதத்திற்கு மத்தியில் துளசி விதைகள் வைக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த அட்டையை மண்ணில் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் அது துளசிச் செடியாக வளரும் என்று அவர் கூறியுள்ளார். இப்போது என் அலுவலகத்திற்கு வரும் அனைவருக்கும் இது அன்பளிப்பாகக் கிடைக்கும் என்று அவர் பதிவில் கூறியிருந்தார். இந்த தனித்துவமான விசிட்டிங் கார்டின் புகைப்படம் தற்பொழுது வைரல் ஆகிவருகிறது. நெட்டிசன்ஸ்கள் மத்தியில் இந்த அட்டைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Android மற்றும் iPhone-ல் இருந்து எப்படி டெலீட் ஆனா WhatsApp சாட்டை மீட்டெடுப்பது? ஈசி டிப்ஸ்!Android மற்றும் iPhone-ல் இருந்து எப்படி டெலீட் ஆனா WhatsApp சாட்டை மீட்டெடுப்பது? ஈசி டிப்ஸ்!

கஸ்வான்

விசிட்டிங் கார்டு அட்டைகளை யாரும் ஒருபோதும் நடப்போவது இல்லை அதை பாதுகாப்பாக வைக்கத்தான் பார்ப்பார்கள் என்று ஒரு டிவிட்டர் பயனர் கருது தெரிவித்திக்கிறார். ​​கஸ்வான் அதற்கு, இது ஒரு பிரிவினை பரிசு பொருள் என்றும் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் யோசனையுடன் உருவாக்கப்படவில்லை என்றும் விளக்கியுள்ளார். அட்டை பெறுபவர்களுக்கு இது நடப்பட வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
IFS officer’s unique visiting card inspires many others to go green : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X