கிளம்பியது சர்ச்சை: 4வது குண்டு யாருடையது? புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை மர்மம்.!
மகாத்மா காந்தி பற்றி உலக நாடுகள் அனைத்தும் நீண்ட இடைவேளைக்குப் பின் மறுபடியும் விவாதிக்கத் துவங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக தற்பொழுது கமல்ஹாசன் தெரிவித்த கருத்து காரணமாகி இருக்கிறது.
மகாத்மா காந்தி பற்றி உலக நாடுகள் அனைத்தும் நீண்ட இடைவேளைக்குப் பின் மறுபடியும் விவாதிக்கத் துவங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக தற்பொழுது கமல்ஹாசன் தெரிவித்த கருத்து காரணமாகி இருக்கிறது.
source- www.puthiyathalaimurai.com

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து
"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து, அவரின் பெயர் நாதுராம் கோட்சே" என்று கமல் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி முதல் துவங்கி விவேக் ஓப்ராய் வரை அனைவரும் அவர்களின் கருத்தை சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் தெரிவித்துவிட்டனர்.

நான்காவதுக் குண்டு எங்கிருந்து வந்தது? யார் சுட்டது?
இது ஒரு புறம் இருக்கக் காந்தி இறந்த பொழுது அவரின் உடலிலிருந்தது நான்கு குண்டுகள், ஆனால் கோட்சே சுட்டதோ மூன்று குண்டுகள், அப்படியானால் நான்காவதுக் குண்டு எங்கிருந்து வந்தது? யார் சுட்டது? என்ற கேள்வி பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதிநவீன பெரெட்டா செமி ஆட்டோமேட்டிக் பிளாக் இத்தாலியன் பிஸ்டல்
நாதுராம் கோட்சே, காந்தியைக் கொலை செய்யப் பயன்படுத்தியது அதிநவீன பெரெட்டா செமி ஆட்டோமேட்டிக் பிளாக் இத்தாலியன் பிஸ்டல். விலை உயர்ந்த இந்த துப்பாக்கி ஒரு சாதாரண தையற்கடைக்காரரான கோட்சேயின் கைகளுக்கு கங்காதர் டண்டவேட் என்பவர் மூலம் கிடைத்துள்ளது.

துப்புகள் கிடைக்காமல் விசாரணை நிறுத்தம்
கங்காதர் டண்டவேட்விற்கு, இந்த துப்பாக்கி ஜக்திஷ் பிரசாத் கோயல் என்பவர் மூலம் கிடைத்துள்ளது. ஜக்திஷ் பிரசாத் கோயலின் கைகளுக்கு இந்த துப்பாக்கி எப்படி வந்தது என்பதை காவல்துறையினர் விசாரிக்கத் துவங்கி துப்புகள் கிடைக்காமல் விசாரணையைப் பாதியில் நிறுத்திவிட்டனர்.

மர்மமான நான்காவது தோட்ட
நாதுராம் கோட்சே பயன்படுத்திய பெரெட்டா செமி ஆட்டோமேட்டிக் பிஸ்டலில் மொத்தம் 7, 9mm தோட்டாக்கள் இருந்துள்ளது. அதில் மூன்று தோட்டக்களை மட்டுமே கோட்சே, காந்தியைக் கொலை செய்யப் பயன்படுத்தி இருந்திருக்கிறார். ஆனால் காந்தியின் உடலில் நான்காவதாக ஒரு தோட்டா பாய்ந்துள்ளது, அது யாருடையது என்று விசாரணை 1948 இல் துவக்கப்பட்டது.

தடயம் இல்லாத இந்த நான்காவதுக் குண்டு
காந்தியின் உடலைத் துளைத்த நான்காவதுக் குண்டு கோட்சே பயன்படுத்திய பெரெட்டா செமி ஆட்டோமேட்டிக் பிஸ்டலில் இருந்து சுடப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தடயம் இல்லாத இந்த நான்காவதுக் குண்டு நிச்சயம் வேறு ஒரு நபரால் சுடப்பட்டுள்ளது என்று பாலிஸ்டிக் அறிக்கை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.

டாக்டர் பங்கஜ் ஃபட்னிஸ்
தடயம் இல்லாத இந்த நான்காவதுக் குண்டு தான் காந்தியின் உயிரை எடுத்துள்ளது என்றும், இந்த நான்காவது குண்டை சுட்டவர் யார் என்பதும் மறைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் பங்கஜ் ஃபட்னிஸ் தெரிவித்துள்ளார். காந்தியின் படுகொலையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

காந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படாதது ஏன்?
அதுமட்டுமின்றி காந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படாதது ஏன்? நான்காவதுக் குண்டு யாருடையது என்று விசாரிக்காதது ஏன் என்ற பல கேள்விகள் இன்று வரை மர்மமாகவே உள்ளது. முக்கியமாகக் காந்தியின் படுகொலை அந்த சமயத்தில் பல சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் மூலம் புதைக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே உண்மையாக இருக்கிறது.

வைரல் ஆகும் புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை
காந்தியின் மீதி சுடப்பட்ட அந்த நான்காவதுக் குண்டு எங்கிருந்து வந்தது? யார் சுட்டது? என்ற கேள்விகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கமல் தெரிவித்த கருத்து, புதைக்கப்பட்ட காந்தியின் படுகொலை வழக்கை மறுபடியும் உலகம் முழுதும் தற்பொழுது பேச வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








