Home
Social media

இதுதாங்க பாசம்.. சிஎஸ்கேவுக்கு வாழ்த்து சொன்ன சுந்தர் பிச்சை.! குஜராத்துக்கு என்ன சொல்லிருக்காரு பாருங்க..

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான 16-ஆவது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. குறிப்பாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் முதலில் குஜராத் டைட்டன்ஸ் பேட் செய்தது.

குஜராத்தின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிஎஸ்கே வீரர்கள் பல கேட்ச்களை பிடிக்கத் தவற விட்டனர். ஆனாலும் கில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார். குறிப்பாக கில் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அடுத்த களமிறங்கிய சாய் சுதர்சன், சாஹாவுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இதுதாங்க பாசம்.. சிஎஸ்கேவுக்கு வாழ்த்து சொன்ன சுந்தர் பிச்சை.!

பின்னர் சாஹா 54 ரன்களில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருந்தபோதிலும் சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி பதிரனா ஒவரில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் பாண்டியாவும் அதிரடியாக 21 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 214/4 ரன்கள் எடுத்தது. சிஸ்கே சார்பாக பதிரனா 2 விக்கெட்டுகளையும் தீபக் சஹார்,ஜடஜே, தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. ஆனால் சிஎஸ்கே மூன்று பந்துகள் பிடித்த நிலையில் மழை குறுக்கிட்டது. எனவே இதனால் ஆட்டம் சிறிது தடைப்பட்டது. அதன்பின்பு மழை காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடி ருதுராஜ் 16 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்பு ஷிவம் துபே கான்வேவுடன் ஜோடி சேர்ந்தார். கான்வே தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரையடுத்து களமிறங்கிய ரஹானே அதிரடியாக விளையாடி 13 ரன்களில் 27 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அம்பத்தி ராயுடு 8 பந்துகளில் 19 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் தோனி வந்த வேகத்தில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். குறிப்பாக ரஷித் கான் பந்து வீச்சில் துபே தொடர்ச்சியாக அடித்த 2 சிக்ஸர்களும், அம்பத்தி ராயுடுவின் அதிரடி ஆட்டமும் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. பின்னர் துபே மற்றும் ஜடேஜா கடைசி வரை களத்திலிருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

கடைசி 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட கடைசி ஓவரை மொஹித் சர்மா வீசினார். அவர் வீசிய முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதனால் சிஎஸ்கேவுக்கு அதிக நெருக்கடி உருவானது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட ரவீந்திர ஜடேஜா சிக்ஸர் மற்றும் பவுண்டரி விளாசி சிஸ்கேவுக்கு த்ரில் வெற்றியை பெற்றுத் தந்தார்.

இதுதாங்க பாசம்.. சிஎஸ்கேவுக்கு வாழ்த்து சொன்ன சுந்தர் பிச்சை.!

குறிப்பாக இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தைத் தட்டிச் சென்றது. பின்பு அதிக கோப்பைகளை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையைக் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமன் செய்துள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குஷ்பு, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் தனது ஸ்டைலில் சிஎஸ்கேவிற்கு வாழ்ந்து தெரிவித்துள்ளார். அதாவது சுந்தர் பிச்சை ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது. எப்போதும் போன்று டாடா ஐபிஎல் சிறப்பானது. சிஎஸ்கேவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவான அணியாக திரும்பி வர வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Here's what Google CEO Sundar Pichai told the IPL 2023 winners: Full details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X