Home
Social media

மகாராஷ்ட்ரா: காஸ்மோஸ் வங்கியில் ரூ.94 கோடி வரை திருடிய ஹேக்கர்கள்.!

மேலும் திருடப்பட்ட ரூ.94 கோடி தொடர்பாக புனே சைபர் கிரைம் போலீசார் தங்களது விசாரணையை தற்சமயம் தீவரப்படுத்தி வருக்கின்றனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.

By Prakash S

இப்போது ஆன்லைன் மூலம் பல்வேறு திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி மகாராஷ்ட்ராவில் இருக்கும் காஸ்மோஸ் வங்கியில் ஆன்லைன் மூலம் ரூ.94 கோடி திருடப்பட்ட சம்பவம் வங்க
ஊழியர்கள் உள்பட பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா: காஸ்மோஸ் வங்கியில் ரூ.94 கோடி வரை திருடிய ஹேக்கர்கள்.!

இது போன்ற ஹேக்கிங் பிரச்சனை நாடு முழுவதும் அதிமாக தான் இருக்கிறது, எனவே வங்கிகள் பெயரை சொல்லி யாராவது ஏடிஎம் பின் நம்பர், ஆன்லைன் பரிவித்தனைக்கான பாஸ்வேர்ட் உள்ளிட்ட குறிப்புகளை கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம்.

திருடப்பட்டது எப்படி?

திருடப்பட்டது எப்படி?

காஸ்மோஸ் வங்கியில் இருந்து ஆன்லைன் மூலமே ரூ.94 கோடி திருடப்பட்ட சம்வம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த வங்கியின் மெயின் சர்வர் புனேவில் அமைந்துள்ளது, இந்நிலையில் சர்வரை ஹேக் செய்து பணத்தை ஹேக்கர்கள் ஆன்லைன் வழியாக திருடிவிட்டதாக வங்கி சார்பில் மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 11

ஆகஸ்ட் 11

மேலும் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வங்கியின் சர்வரை ஹேக்கர்கள் ஹேக் செய்து 78கோடி ரூபாயை வெவ்வெறு பரிவரித்தனைகள் மூலம் வெவ்வெறு நாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தியா:

இந்தியா:

பின்பு 2.5 கோடி ரூபாய் இந்தியாவில் உள்ள கணக்கில் பரிவர்த்தனை ஆகியருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி சர்வரை மீண்டும் ஹேக் செய்து ரூ.14கோடி ரூபாயை ஹாங்காங்கில் இருக்கும் டிரேடிங் லிமிடெட் நிறுவன வங்கி கணக்கிற்கு மாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனே சைபர் கிரைம்

புனே சைபர் கிரைம்

மேலும் திருடப்பட்ட ரூ.94 கோடி தொடர்பாக புனே சைபர் கிரைம் போலீசார் தங்களது விசாரணையை தற்சமயம் தீவரப்படுத்தி வருக்கின்றனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Hackers Loot Rs 94 Crore on Two Separate Days From Cosmos Bank in Pune: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X