20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்!பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்

|

உலகத்தில் பலரும் பலவிதமான வித்தியாசமான செயல்களைச் செய்து பிரபலமடைய முயன்று வருகின்றனர். அப்படியான முயற்சியில் புகைப்படக் கலைஞர் ஒருவர் செய்த முயற்சிதான் தற்பொழுது, உலக மக்களைத் திரும்பி பார்க்கவைத்துள்ளது. அப்படி இவர் என்ன செய்தார் என்று தானே யோசிக்கிறீர்கள், வாங்க சொல்கிறோம்.

புகைப்படக் கலைஞர் நோவா கலினா

புகைப்படக் கலைஞர் நோவா கலினா

பிரபலமடைய முயற்சிக்கும் பலருக்கு நடுவில் வித்தியாசமான முயற்சியாகப் புகைப்படக் கலைஞர் நோவா கலினா என்பவர் தன்னை தானே ஒவ்வொரு நாளும் புகைப்படம் எடுத்து வந்துள்ளார். இதில் என்ன சிறப்பு என்றால், தன்னை தானே இவர் படம்பிடித்து எத்தனை ஆண்டுகள் என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்.

20 ஆண்டுகளில் ஒரு நாள் கூட லீவுவிடலை

20 ஆண்டுகளில் ஒரு நாள் கூட லீவுவிடலை

புகைப்படக் கலைஞர் நோவா கலினா, ஜனவரி 11ம் தேதி துவங்கி, ஜனவரி 11ம் தேதி 2020 ஆண்டு வரை தன்னை தானே தினமும் சுமார் 20 ஆண்டுகளாகப் படம்பிடித்துள்ளார். 20 ஆண்டுகளில் ஒரு நாள் கூட இவர் படம் எடுக்கத் தவறியதில்லையாம். வித்தியாசமான இந்த முயற்சியின் 20 ஆண்டின் இறுதி புகைப்படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

செல்ஃபி கலாச்சாரத்திற்கு முன்பே

செல்ஃபி கலாச்சாரத்திற்கு முன்பே

இதில் வேடிக்கை என்னவென்றால் செல்ஃபி என்ற கலாச்சாரம் ஆரம்பம் ஆவதற்கு முன்பே இவர் செல்ஃபி எடுக்க துவங்கியுள்ளார். இவர் எடுத்துள்ள ஒவ்வொரு புகைப்படத்திலும் இவரின் ரியாக்ஷன் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. ஆனால், அவரின் சுற்றுப்புறங்கள் மட்டும் மாறத் தொடங்கும் படி 20 ஆண்டுகளாகப் படம்பிடித்துள்ளார்.

வைரல் ஆகும் வீடியோ

நோவா கலினா, 20 ஆண்டுகளாக எடுத்த புகைப்படத்தை ஒரு வீடியோ பதிவாக மாற்றியுள்ளார். இந்த வீடியோ பதிவு நம் கண்களுக்கு முன்பாக மாறும்போது 20 ஆண்டுகள் வெறும் சில நொடிகளில் கடந்து முடிந்துவிடுகிறது. நோவா கலினா 2000 ஆம் ஆண்டில் இளைஞராக இருந்த பொது துவங்கி, 20 ஆண்டுகளில் அவர் எப்படி மாறியுள்ளார் என்பதை இந்த வீடியோ காட்டுகிறது. சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.

Best Mobiles in India

English summary
Guy Took A Selfie Every Day For 20 Years And The Video Went Viral : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X