ஃபேஸ்புக்கில் குவஹாத்தி சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு!

Posted By: Staff

இந்த செயலுக்கு காரணமாக கருதப்படும் கலிதா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி நிறைய பேர் தங்களது கருத்துக்களையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டும் அல்லாது கலாச்சார சீர்கேடிற்கு உதாரணமாகும் இந்த சம்பவத்திற்கு, அந்த கும்பலில் முக்கிய காரணமாக இருந்தவரின் புகைப்படமும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அதாவது குவஹாத்தியிலிருந்து மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங் செல்லும் வழியில் மதுபானம் அறுந்திவிட்டு குடிகார கும்பல் ஒன்று ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதாக ஜூலை 13-ஆம் தேதி ஒரு செய்தி வெளியானது.

ஃபேஸ்புக்கில் குவஹாத்தி சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு!

இதை தொடர்ந்து பெண்ணை மானபங்கப்படுத்திய கும்பலில் ஒருவரான கலிதா, இந்த முறைகேடான சம்பவத்தில் இருந்து தான் விலகியிருக்க வேண்டும் என்றும், ஆனால் அப்படி செய்யாமல் தான் தவறு செய்துவிட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் கலிதா என்ற இவர் அசாம் எலெக்ட்ரானிக்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஏம்ட்ரானில் வேலை செய்கிறார் என்று இவரது ஃபேஸ்புக் ப்ரொஃபைல் கூறுகிறது. இவரை ஏம்ட்ரான் நிறுவனம் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளனர். இதில் அந்த பெண் சில நண்பர்களுடன் மதுபான கடைக்கு வந்திருந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியது.

இதற்கும் சில பேர் பெண்களும், ஆண்களும் மது அருந்துவது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்ததோடு, ஒரு பெண்ணை இது போன்று நடுரோட்டில் மானபங்கப்படுத்துவதை கண்டிக்காமல் விட்டால், இதை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்பது போன்ற கருத்துக்களும் பரிமாறப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் விஷயங்களை பகிர்ந்து கொள்ள என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபேஸ்புக், இப்போது அனைவரும் தங்களது கருத்துக்களை வெளியிடும் மேடையாகவும் மாறி வருகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot