வைரல் வீடியோ: கொள்ளையர்களை செருப்பால் அடித்து விரட்டிய தம்பதி-தமிழக அரசு விருது.!

கையில் அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை வெறும் செருப்பாலும், பிளாஸ்டிக் சேர்களாலும் அடித்து விரட்டிய நெல்லை வயதான தம்பதியின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. இவர்கள் கொள்ளையர்களை மிகவும் அதீத துணிச்சலுடன

|

கையில் அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை வெறும் செருப்பாலும், பிளாஸ்டிக் சேர்களாலும் அடித்து விரட்டிய நெல்லை வயதான தம்பதியின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது.

இவர்கள் கொள்ளையர்களை மிகவும் அதீத துணிச்சலுடன் விரட்டியடித்த காட்சிகள் அவர் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிசி கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

வைரல் வீடியோ:கொள்ளையர்களை செருப்பால்அடித்து விரட்டிய தம்பதிக்குவிருது!

இது தற்போது அனைத்து இணையதளங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்யைர்களை விரட்டியடித்த வயதான தம்பதிக்கு இந்தியா முழுக்க திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் வாதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ சமூக இணைதளயத்தில் வைரலாகியுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த தம்பதிக்கு விருது அறிவித்துள்ளார்.

சண்முகவேல் குடும்பம்:

சண்முகவேல் குடும்பம்:

திருநெல்வேலி கடையம் அருகே கல்யாணிபும் என்ற ஊரை சேர்ந்தவர் சண்முகவேல் (70). அம்பாசமுத்திரம் மதுரா கோட்ஸ் ஆலையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மனைவி செந்தாமரை (65). இவர்களுக்கு இரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு அனைவருக்கும் திருமணமாகிய நிலையில், மகன்கள் பெங்களூர், சென்னை, மகள் அமெரிக்காவில் குடும்பத்தில் வசிக்கின்றனர்.

தோட்டத்தில் நுழைந்த கொள்ளையர்கள்:

தோட்டத்தில் நுழைந்த கொள்ளையர்கள்:

மனைவியுடன் தனது தோட்டத்தில் சண்முகவேல் வசித்து வருகின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.11 இரவு) சண்முகவேல் வீட்டின் முன் பகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது, முகத்தை துணியால் மறைத்து கட்டிய வந்த கொள்ளையர்களில் ஒருவன் சண்முகவேலின் கழுத்தை துண்டால், நெறித்து கொலை செய்ய முயன்றான். மற்றொரு கொள்ளையன் அரிவாளுடன் வந்தான்.

கொள்ளயைர்களுக்கு செருப்படி:

கொள்ளயைர்களுக்கு செருப்படி:

அப்போது சத்தம் கேட்ட வீட்டின் உள்புறத்தில் இருந்து ஓடி வந்த சண்முகவேல் மனைவி, கொள்ளையன் கணவன் கழுத்தில் துண்டை போட்டு நெறிப்பதை கண்டு சத்தம் போட்டு, அருகே கிடந்த செருப்பை எடுத்து வீசியும், பிளாஸ்டிக் சேர், கட்டை உள்ளிட்டவைகளுடன் விரட்டினார். பயந்து போன கொள்ளையன் கழுத்தில் இருந்த துண்டு பிடி இழக சண்கவேல், உடனடியாக தப்பி வந்தார்.

சிசிடிவி கேமரா காட்சி:

சிசிடிவி கேமரா காட்சி:

அப்போது, அரிவாளுடன் வந்த மற்றொரு கொள்ளையனையும் பிளாக்டிக் சேர் உள்ளிட்ட பொருட்களால் தூக்கி வீசியும் வீரமாக சண்டை போட்டு விரட்டினர். இது வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்களில் காட்சி பதிவானது. இந்த தம்பதியின் வீரத்திற்கு முன்னாள் கொள்ளையர்களின் பாட்சா பலிக்கவில்லை. இதனால் அவர்கள் அங்கியிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த காட்சிகள் சமூக இணைதளங்களில் ரைவாக பரவியது.

<strong>உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த அம்பானியின் 10அம்ச பேச்சு.!</strong>உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த அம்பானியின் 10அம்ச பேச்சு.!

பாராட்டு குவிந்தது:

பாராட்டு குவிந்தது:

இந்நிலையில், இந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் கண்ட மக்களும் ஒருவருக்கு கொருவர் சேர் செய்து கொண்டனர். இந்திய முழுக்கவும் இந்த காட்சி அனைத்து ஊடங்களிலும் ஒளிப்பரப்பானது. பல்வேறு தரப்பினர்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இதில் அரசியல் வாதிகள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா துறையினர் என போட்டி போட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து அவர்கள் வீரதீர தம்பதி என்று பதிவேற்றம் செய்தனர்.

இந்த சம்பம் தொடர்பாக போலீசாரும் விசாரித்து வருகின்றனர். பிறகு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நேரில் சந்தித்து பாராட்டினார்.

<strong>தமிழ் ராக்கர்ஸை முடக்கம் செய்ய வார்னர் பிரதர்ஸ் முடிவு! திட்டம் பலிக்குமா?</strong>தமிழ் ராக்கர்ஸை முடக்கம் செய்ய வார்னர் பிரதர்ஸ் முடிவு! திட்டம் பலிக்குமா?

அமிதாப் பச்சன் பாராட்டு :

இதையறிந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்த தம்பதிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் பாராட்டு :

இதை கண்ட கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும். என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி
பகைக்கு முன்னாடி #புலி ன்னு சொல்ர மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் #நேர்கொண்டபார்வை என்று பதிவேற்றம் செய்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

<strong>மலிவு விலை சாம்சங்32 இன்ச் ஸ்மார்ட் டிவி: ரூ.999க்கு வாங்கும் முறை.!</strong>மலிவு விலை சாம்சங்32 இன்ச் ஸ்மார்ட் டிவி: ரூ.999க்கு வாங்கும் முறை.!

மு.க ஸ்டாலின் வாழ்த்து:

இதனிடையே கொள்ளையர்களைத் துணிவுடன் விரட்டிய, நெல்லை, கல்யாணிபுரத்தின் சண்முகவேல்-செந்தாமரை இணையருக்கு வாழ்த்துகள் என்று திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.

விருது வழங்குவதாக அறிவிப்பு:

விருது வழங்குவதாக அறிவிப்பு:

இந்நிலையில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை சுதந்திர தின விழாவில் சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விருது வழங்குகிறார்.

Best Mobiles in India

English summary
Government of Tamilnadu honors Thirunelveli couple Who Beaten The Robbers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X