Home
Social media

முந்தைய குரோம் புக்கைவிட குறைந்த விலையில் புதிய குரோம் புக்கை களமிறக்கும் கூகுள்

By Karthikeyan
 முந்தைய குரோம் புக்கைவிட குறைந்த விலையில் புதிய குரோம் புக்கை களமிறக்கும் கூகுள்

கூகுளின் குரோம்புக் லேப்டாப்புகள் மிகவும் பிரபலமானவை. இந்த குரோம்புக்குகள் சிறப்பான விற்பனையைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில் கூகுள் தற்போது ஏசர் சி7 என்று புதிய குரோம் புக்கை களமிறக்கி இருக்கிறது. பழைய குரோம் புக்கைவிட இந்த புதிய ஏசர் சி7 குரோம்புக் மிகவும் குறைந்த விலையில் வருகிறது.

இதன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெறலாம் என்று கூகுள் திட்டமிடுகிறது. மேலும் இந்த ஏசர் சி7 குரோம்புக்கை ஏசர் நிறுவனத்தின் கூட்டணியோடு களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய குரோம்புக் சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக இந்த புதிய குரோம்புக் 320ஜிபி ஹார்ட்ரைவ், 11.6 இன்ச் டிஸ்ப்ளே, இன்டல் ப்ராசஸர், 2ஜிபி ரேம், யுஎஸ்பி 3 மற்றும் எச்டிஎம்ஐ போர்ட்டுகள் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் 1 கிலோ எடையுடன் வரும் இந்த லேப்டாப் 100ஜிபி கூகுள் ட்ரைவ் க்ளவுட் சேமிப்புடன் வருகிறது.

இவ்வளவு வசதிகளுடன் வரும் இந்த ஏசர் சி7 குரோம்புக் மிகவும் குறைந்த விலையுடன் வருகிறது. அதாவது இந்த குரோம்புக்கை 199 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கலாம். கடந்த மாதம் சாம்சங் அறிமுகம் செய்த குரோம்புக்கை விட 50 அமெரிக்க டாலர்களுக்கு குறைவாக இந்த புதிய குரோம்புக்கை கூகுள் வழங்குகிறது.

இந்த குரோம்புக் மிகவும் குறைந்த விலையில் வருவதால் இது விற்பனைக்கு வரும் 30 நாள்களில் விற்றுத் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள கூகுள் ப்ளே ஸ்டோர், அமேசான் மற்றும் பெஸ்ட் பை போன்ற கடைகளில் இந்த குரோம் புக்கை வாங்கலாம். மேலும் இங்கிலாந்திலும் தற்போது இந்த குரோம்புக் விற்பனைக்கு வந்திருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X