கூகுள் செய்வது திருட்டுத்தனம்...இங்கிலாந்து மக்கள் கொந்தளிப்பு!

By Jeevan
|

கூகுள் நிறுவனம் தங்களது சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், சில நேரங்களில் சுயவிவரங்கள் திருடப்படுகிறதோ என்ற பயம் உள்ளதாகவும் இங்கிலாந்தின் இணையப்பயனாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

அதிலும் ஆப்பிள் ஐபோன்களில் தான் இம்மாதிரியான தகவல்கள் கண்காணிக்கப்படுவதாக கூகுள் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

இங்கிலாந்தில் மட்டும் சுமார் 1 கோடிக்கும் மேலான ஐபோன் பயனாளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி என்னதான் கூகுள் நிறுவனம் திருட்டுத்தனம் செய்தது மக்கள் ஏன் கொந்தளித்தார்கள் என்பதற்கான விவரங்கள் கீழே!

கூகுள் செய்வது திருட்டுத்தனம்

கூகுள் செய்வது திருட்டுத்தனம்

ஆப்பிள் போன் பயனாளர்களின் விவரங்கள் திருடப்படுவதுடன் அவர்கள் தினந்தோறும் பயன்படுத்தும் இணையங்கள், அவர்களுக்கு பிடித்தமான விவரங்கள் எவையென கண்கானிக்கப்படுகிறதாகவும், தெரியாமல் தகவல்கள் களவாடப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

கூகுள் செய்வது திருட்டுத்தனம்

கூகுள் செய்வது திருட்டுத்தனம்

'கூகுள்' தேடுபொறியின் நுட்பத்தினை மேம்படுத்துவதற்காகவும், விரைவான தகவல்களை பெறுவதற்காகவும் 'குக்கீஸ்' என்ற தற்காலிக ஆவணத்தை நமது கணினியிலோ அல்லது மொபைல் போனிலோ நிறுவுகிறது.

இதன் மூலமாக தங்களது தகவல்கள் மற்றும் சுதந்திரங்கள் பறிக்கபடுவதாகவும் இங்கிலாந்து மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

கூகுள் இதை மறுத்துள்ளது.

கூகுள் செய்வது திருட்டுத்தனம்

கூகுள் செய்வது திருட்டுத்தனம்

இங்கிலாந்தில் 10 மில்லியன், அதாவது 1 கோடிக்கும் மேலான ஆப்பிள் பயனாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனையா?

இல்லவே இல்லை. கூகுள் அனைத்து நாடுகளிலும், அனைத்து சாதனங்களிலும் இதைத்தான் செய்கிறது. இங்கிலாந்து இப்பொழுதுதான் 'களத்தில்' இறங்கியுள்ளது. நமக்கு இதன் அருமை பின்நாட்களில் தெரியவரும்.

கூகுள் செய்வது திருட்டுத்தனம்

கூகுள் செய்வது திருட்டுத்தனம்

தங்களது தேடுபொறியின் தேடும் தன்மையையும், தரம் மற்றும் வேகத்தை அதிகரிப்பதெல்லாம் வேறுகதை. இதை கூகுள் செய்வதற்கு முக்கிய காரணமே 'ஆட்சென்ஸ்' என்ற தனது ப்ராடக்ட்டின் வருமானத்தை அதிகரிக்கவே செய்கிறது.

இதைப்பற்றி எழுத தனிக்கட்டுரையே தேவை!

கூகுள் செய்வது திருட்டுத்தனம்

கூகுள் செய்வது திருட்டுத்தனம்

'விக்கி லீக்' மூலம் உலகத்தையே மிரட்டிய 'ஜூலியன் ஆஸாங்கே', ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 'ஃபேஸ்புக் தான் உலகிலேயே மிக மோசமான திருடன். உங்களை பற்றிய அனைத்து விவரங்களும் அவர்கள் சர்வர்களில்' என்றார்.

அதனால் நமது வாடிக்கையான 'ஃபேஸ்புக்' பயன்பாட்டை சற்றே குறைத்துக்கொள்ளலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X