பேய் இருக்கா இல்லையா? வைரல் ஆகும் அமானுஷ்ய வீடியோ!
பேய் இருக்கா இல்லையா? பேய் என்று சொன்னாலே பலரும் நடுங்குவர். ஆனாலும், உண்மையில் பேய் என்பது என்ன? அது ஒரு பொருளா? அல்லது அது ஒரு சக்தியா? சாதாரண மனிதனின் கண்ணுக்குப் புலப்படுமா? என்று பல கேள்விகள் பலருக்கும் இருந்திருக்கும். அதற்கான பதிலாக தற்பொழுது ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.

தானாக நகர்ந்த வீல் சேர்
ஹரியானா மாநிலத்தில் உள்ள சத்தீஷ்கரில் பகுதியில் உள்ள, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலிருந்த வீல் சேர் யாருமில்லாமல் தானாக நகர்ந்து சென்றுள்ளது. இந்த காட்சி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் வீடியோவாக பதிவாகியுள்ளது.

அமானுஷ்ய சக்தி
மருத்துவமனை வளாகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தானாக அந்த வீல் சேர் நகர்ந்ததைப் பார்த்த பலரும் இதை அமானுஷ்ய சக்தியின் வேலை என்று குறிப்பிட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்திலிருந்த செக்யூரிட்டி வீல் சேர் தானாக நிகழ்வதை நேரில் கண்டிருக்கிறார்.

நெட்டிசன்களின் கருத்து
சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவரும் இந்த வீடியோ பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், இது அமானுஷ்யமில்லை என்றும், வீல் சேரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தி இருக்கலாம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
உண்மையில் நடந்தது என்ன என்று இன்னும் சரியாக விளக்கம் வழங்கப்படவில்லை, இருப்பினும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது அமானுஷ்யமா அல்லது அறிவியலா அல்லது சேட்டைக்காரர்கள் கிளப்பிவிட்ட புரளியா என்று கமெண்டில் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








