கூகுள் பற்றிய சில தகவல்கள்...

By Jeevan
|

கூகுள் என்ற இணைய தெய்வம் தான் பலரை வாழவைக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது! கூகுள் தேடுபொறி இல்லையெனில் பலரது கதி அதோகதிதான். எப்படி என்கிறீர்களா? ஒரே ஒருநாள் கூகுள் தளத்தையும் அதன் சேவைகளையும் உபயோகிக்காமல், இணையத்தில் உலாவந்துதான் பாருங்களேன்...

கூகுள் சர்ச், ஜிமெயில், யூடியூப், பிளாக்கர் மற்றும் பணம் சம்பாதிக்க உதவும் ஆட்சென்ஸ் போன்றவைகள் இல்லாமல் எதுவும் செய்துவிடவும் முடியாது. குரோம் உலவி மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளம் ஆகியவையும் இதில் அடங்கும். இப்படி பல பெருமைகளையும் அற்புத சேவைகளையும் வழங்கும் கூகுள் நிறுவனம் பற்றிய சில வேடிக்கையான தகவல்கள் தான் இங்கே வெளியிடப்பட்டுள்ளவை.

நோக்கியாவின் சூப்பர் அலுவலக படங்கள்..!

கூகுள் பற்றிய சில தகவல்கள்...

கூகுள் பற்றிய சில தகவல்கள்...

இதுதான் கூகுளின் முதல் லோகோ. இது 1998ல் வடிவமைக்கப்பட்டது. இதுதான் கூகுளின் முதல் டூடுளும் கூட.

கூகுள் பற்றிய சில தகவல்கள்...

கூகுள் பற்றிய சில தகவல்கள்...

கூகுளின் முதல் நினைவகம்:

கூகுள் போன்ற தளத்தை நடத்துவதற்கு நம்மால் நினைத்தும் பார்க்கமுடியாத அளவில் நினைவகம் தேவைப்படுகிறது. குறிப்பாக பல பெரிய சர்வர்கள் தேவைப்படுகிறது. இதுவும் சாதாரண சர்வர்கள் போதாது. ஆனால் இதன் முதல் நினைவகத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? 40 ஜிபிகள் உடைய இந்த கருவிதான்.

கூகுள் பற்றிய சில தகவல்கள்...

கூகுள் பற்றிய சில தகவல்கள்...

இதுதான் கூகுள் நிறுவனத்தின் முதல் ட்விட்டர் பதிவு.

கூகுள் பற்றிய சில தகவல்கள்...

கூகுள் பற்றிய சில தகவல்கள்...

கூகுள் ஆடுவளர்க்கிறது:

உண்மைதான் கூகுள் கலிபோர்னியா கிரேசிங் என்ற நிறுவனத்திடமிருந்து 200 ஆடுகள் வாடகைக்கு எடுத்து வளர்க்கிறது.

கூகுள் பற்றிய சில தகவல்கள்...

கூகுள் பற்றிய சில தகவல்கள்...

கூகுள் 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு தற்பொழுது இருக்கும் பக்கத்தை உடையதாக இல்லை. யாஹூ நிறுவனத்தின் தேடுபொறியை போல இருந்தது. 2001க்குப் பிறகே கூகுளின் முகப்பு பக்கமானது இவ்வளவு எளிதாகவும் சிறப்பானதாகவும் மாற்றப்பட்டது.

Click Here For New Gadget Images

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X