வேர்க்க விறுவிறுக்க சைக்கிளில் உணவு டெலிவரி செய்த நபர்: 24 மணிநேரத்தில் ஒரு டுவிஸ்ட்: கடவுள் இருக்கான் குமாரு!

|

சமூகவலைதளங்களில் வைரலான ஒரு விஷயத்துக்கு நெட்டிசன்கள் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் சைக்கிள் மூலம் உணவு டெலிவரி செய்த ஒருவரின் மனம் கவரும் சுவாரஸ்ய நிகழ்வு குறித்து பார்க்கலாம். கோடை காலம் தொடங்கி வெயிலின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதையடுத்து வெளிப்புறத்தில் சுற்றி அழைந்து பணி புரிவர்கள் கடுமையான சூழலை சந்திக்க வேண்டியது இருக்கும். மறுபுறம் பெட்ரோலின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் பல்வேறு இக்கட்டான சூழலை அனைவரும் சந்தித்து வருகின்றனர். பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்தும் பலருக்கும் இந்த பெட்ரோல் விலை உயர்வு என்பது இக்கட்டான சூழலை ஏற்படுத்தும். இதற்கு தொடர்புடைய ஒருவரை குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வருபவர் ஆதித்யா ஷர்மா. இவர் சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த உணவு டெலிவரிக்கு ஆதித்யா காத்திருந்துள்ளார். உணவும் டெலிவரிக்கு வந்துள்ளது. இதில் கவனிக்கத்த விஷயம் என்னவென்றால், ஆதித்யாவுக்கு உணவு டெலிவரி செய்ய வந்தவர் உச்சி வெயலில் வேர்க்க விறுவிறுக்க சைக்கிளில் வந்துள்ளார். ஆதித்யா சர்மா தனக்கு உணவு டெலிவரி செய்ய வந்தவரை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போகியுள்ளார். உணவு டெலிவரி செய்ய வருபவர்கள் அனைவரும் பைக் பயன்படுத்துவதே வழக்கம். ஆனால் இவர் 42 டிகிரி செல்சியஸ் வெயிலில் சைக்கிளில் வந்துள்ளார்.

பைக் வாங்குவதற்கு பணம் இல்லை

பைக் வாங்குவதற்கு பணம் இல்லை

தொடர்ந்து தன்னிடம் பைக் வாங்குவதற்கு பணம் இல்லை என டெலிவரி செய்ய வந்த நபர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து டெலிவரிக்கு சைக்கிளில் வந்த நபரை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில் டெலிவரி வேலையை சைக்கிளில் செய்யும் இவருக்கு பைக் வாங்க நிதி திரட்ட இருப்பதாகவும் நண்பர்கள் உதவும்படியும் கோரிக்கை வைத்துள்ளார். ஆதித்யா பதிவிட்ட இந்த பதிவுக்கு டுவிட்டரில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மீம் போடவும் விமர்சனங்களை பதிவிட மட்டும் நாங்கள் இல்லை உண்மை சம்வத்துக்கு உதவுவதற்கும் முன்வருவோம் என்பதை நிரூபிக்கும் வகையில், டுவிட்டரில் ஆதித்யா பதிவிட்ட பதிவுக்கு 24 மணி நேரத்துக்குள் விடை கிடைத்துள்ளது. அதாவது ஆதித்யா டுவிட்டரில் பதிவிட்ட பதிவைத் தொடர்ந்து 24 மணி நேரத்துக்குள் ரூ.75,000 நிதி சேர்ந்திருக்கிறது.

டெலிவரி செய்ய வந்த நபர்

இதையடுத்து டெலிவரி செய்ய சைக்கிளில் வந்த அந்த நபரை அழைத்து, பைக் ஷோரூம்-க்கு அழைத்து சென்று புது பைக் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார். அதில் டெலிவரி நபருக்கு பிடித்த ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கே வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சைக்கிளில் டெலிவரி செய்ய வந்து புதிய பைக் உதவியாக பெற்ற நபர் குறித்த விவரம் தெரியவந்தது. சைக்கிளில் டெலிவரி செய்ய வந்த நபர் பெயர் துர்கா மீனா, இவரது வயது 31 ஆகும். தனது கடுமையான நிதி நிலை காரணமாக டெலிவரி நிர்வாகியாக பணியைத் தொடங்கியுள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக டெலிவரி வேலை

பி.காம் படிப்பை முடித்த துர்கா மீனா மேலும் படிக்க விரும்புகிறார் என்பது தெரியவந்தது. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் மேற்படிப்பு படிக்க முடியவில்லை, இருப்பினும் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக செயல்பட்டு வந்ததாகும் கொரோனா பரவலால் வேலை இழந்து பின் ஆன்லைன் உணவு டெலிவரி பணிக்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் வங்கிக் கடனில் சிக்கி இருப்பதாகவும் டெலிவரி வேலை மூலம் ரூ.10,000 மட்டுமே வருமானம் கிடைப்பதால் தன்னால் வங்கி கடனை மாதந்தோறும் செலுத்த முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டுகளும், வாழ்த்துகளும்

வெயிலில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்த நபருக்கும் 24 மணிநேரத்துக்குள் பைக் வாங்கிக் கொடுத்த சம்பவம் பலரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் அதிக பேரால் பகிரப்பட்டும் வாழ்த்தப்பட்டும் வருகிறது. இந்தியாவில் இதுபோன்ற க்ரவுட்ஃபண்ட் மூலம் உதவி செய்வது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் டெலிவரி நிர்வாகிகளுக்கு க்ரவுட்ஃபண்ட் மூலம் பலர் உதவி செய்திருக்கின்றனர். அதேபோல் சென்னை காவல்துறை தகவல்படி, டெலிவரி ஊழியர்கள் அதிக எண்ணிக்கையிலானோர் விதிமீறல்களை செய்வதாகவும் இதனால் பல லட்சம் ரூபாய் வரை செலான்களை செலுத்துகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Best Mobiles in India

English summary
Orderer Helped to Zomato Delivery Boy Who Delivered Food in Cycle

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X