ரூ.23 கோடி மதிப்புள்ள மீனைப் பிடித்த மீனவர்! ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?

|

பிரமாண்டமான ராட்சத டூனா மீனைப் பிடித்த மீனவரின் படங்களை வெஸ்ட் கார்க் சார்ட்டர்ஸ் என்ற அமைப்பு பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. இந்த பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

ராட்சத டூனா மீன்

ராட்சத டூனா மீன்

8.5 அடி நீளமுள்ள பிரமாண்டமான ராட்சத பெரிய டூனா மீனை அயர்லாந்தில் உள்ள வெஸ்ட் கார்க் சார்ட்டர்ஸ் என்ற அமைப்பை சேர்ந்த டேவ் எட்வர்ட்ஸ் என்பவர் முதல் முறையாகப் பிடித்திருக்கிறார். பிடித்த ராட்சத மீனின் விலை என்ன தெரியுமா?

ரூ.23 கோடியாம் இந்த மீனின் விலை

ரூ.23 கோடியாம் இந்த மீனின் விலை

ஐரிஷ் மிரர் கணிப்பின்படி, இந்த ஆண்டு, ஐரிஷ் நீரில் பிடிபட்ட மிகப்பெரிய அசுரன் ராட்சத டூனா மீன் ஜப்பானில் சுமார் 3 மில்லியன் யூரோக்கள் வரை மதிப்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இவர் பிடித்த ராட்சத டூனா மீனின் விலை சுமார் ரூ.23 கோடியாம்.

வாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காது! ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப் - காரணம் இதோ!வாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காது! ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப் - காரணம் இதோ!

கேட்ச் அண்ட் ரிலீஸ்

கேட்ச் அண்ட் ரிலீஸ்

எக்கோ லைவ் படி, அக்டோபர் 15 வரை நடக்கும் 'கேட்ச் அண்ட் ரிலீஸ்' திட்டத்தில் பங்கேற்ற 15 மீனவ போட்டியாளர்களின் டேவ்'வும் ஒருவராக இருந்திருக்கிறார். இவர் இந்த திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டியில் தான் இந்த ராட்சத டூனா மீனைப் பிடித்திருக்கிறார்.

கேட்ச் அண்ட் ரிலீஸ் திட்டத்தின் முக்கிய விதி

கேட்ச் அண்ட் ரிலீஸ் திட்டத்தின் முக்கிய விதி

கேட்ச் அண்ட் ரிலீஸ் திட்டத்தில் பிடிக்கப்படும் மீன்களை, மீனவர்கள் அதன் எடை மற்றும் அளவை கணெக்கெடுத்துவிட்டு அதற்கான உரிய டேக்-ஐ மீன்களுடன் டேக் செய்த பிறகு அதை மீண்டும் கடலுக்குள் விட்டுவிட வேண்டும். இதுதான் கேட்ச் அண்ட் ரிலீஸ் திட்டத்தின் முக்கிய விதி என்பது குறிப்பிடத்தக்கது.

போனின் ஃபேஸ் அன்லாக் மூலம் வந்த பிரச்சனை: கணவனுக்கு மனைவி செய்த கொடூர செயல்!போனின் ஃபேஸ் அன்லாக் மூலம் வந்த பிரச்சனை: கணவனுக்கு மனைவி செய்த கொடூர செயல்!

ஒரு மீனிற்கு 23 கோடியா? வைரல் ஆகும் பதிவு

ஒரு மீனிற்கு 23 கோடியா? வைரல் ஆகும் பதிவு

இதனால் தான் டேவ் பிடித்த ரூ.23 கோடி மதிப்புள்ள ராட்சத டூனா மீன் மீண்டும் கடலுக்குக்கள் விடப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த செய்தி சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.

Best Mobiles in India

English summary
Fisherman Caught Worth Rs.23 Crore Tuna Fish On Fishing Event But do you know what he did : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X