உங்களிடம் கடவுள் பேசினால் இப்படி தான் இருக்கும்.. இணையத்தில் வைரலாகும் "கூகூ" வீடியோ!

|

முதல் முறையாக கடவுள் உங்களிடம் பேசினால் என்ற தலைப்பில் ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒரு வயதான பெண் கூகுள் அசிடென்ட் உடனான தனது முதல் அனுபவத்தை வெளிப்படுத்துகிறார். இந்த காட்சி பலரையும் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கிறது. இந்த வீடியோவானது 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. வீடியோவில் உள்ள காட்சித் தகவலை பார்க்கலாம் வாங்க.

அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வு

அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வு

20 வருடங்களாக கோமாவில் இருந்து ஒருவர் திடீரென எழுந்தால் இப்போது உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் நகர வளர்ச்சிகள் அவருக்கு எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கோமாளி திரைப்படத்தில் பார்த்திருப்போம்.

இதே தாக்கம் தான் நமது வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கும் இருக்கும். இன்று இருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இளம் தலைமுறைனருக்கே வியப்பளிக்கிறது. முதியவர்கள் இதில் விதிவிலக்கு அல்ல.

கற்றுக் கொள்ள விரும்பும் முதியவர்களுக்கு கற்றுக் கொடுப்பது இளம் தலைமுறையினரின் கடமை அல்லவா. சரி, இங்கும் ஒரு வயதான பெண்ணிற்கு இப்படியான ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது. அதை முதலில் பார்க்கலாம்.

திகைத்து போன பாட்டி

திகைத்து போன பாட்டி

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள பல முதியவர்கள் ஆர்வம் காட்டினாலும் சிலர் இதில் இருந்து ஒதுங்கி இருப்பதே சிறந்தது என எண்ணுகிறார்கள்.

ஒதுங்கி இருப்பவர்களை அழைத்து வந்து இது தான் சமீபத்தில் அறிமுகமான புது தொழில்நுட்பம் என்று காட்டினால் அவர்கள் வியப்படையாமல் என்ன செய்வார்கள்.

அப்படி ஒரு வயதான பெண், தனது கேள்விக்கு கூகுள் அசிஸ்டென்ட் அளித்த பதிலை பார்த்து திகைத்து போகியுள்ளார்.

வீடியோவில் உள்ள காட்சிகள்

வீடியோவில் உள்ள காட்சிகள்

வைரலாகும் இந்த வீடியோ ஜென்னி வீவர் என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பாட்டி ஒருவர் கூகுள் அசிஸ்டன்ட் உடன் பழக முயலுகிறார். டைனிங் டேபிளில் குடும்பத்தினர் அனைவரும் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். அப்போது அந்த பாட்டியின் முன்னாள் கூகுள் அசிஸ்டென்ட் ஸ்பீக்கரை வைத்து "ஹே கூகுள்" அல்லது "ஓகே கூகுள்" என்று சொல்லும்படி அவரது குடும்பத்தினர் அந்த பாட்டியிடம் கேட்கின்றனர்.

"கூகூ" என்று அழைத்த பாட்டி

முதலில் அந்த பாட்டி, கூகுள் என்று உச்சரிப்பதற்கு பதிலாக "கூகூ" என்ற குறிப்பிடுகிறார். கூகூ என்பதை அந்த பாட்டி மிகவும் அழகாக உச்சரிக்கிறார். அதற்கு கூகுள் அசிஸ்டென்ட் ரிப்ளை செய்யவில்லை. பின் குடும்பத்தினர் அந்த பாட்டியிடம் வானிலை அறிக்கைக் குறித்து கூகுள் அசிஸ்டன்ட் இடம் கேட்கும்படி கூறுகிறார்கள்.

கூகுள் அசிஸ்டென்ட் ரிப்ளை

கூகுள் அசிஸ்டென்ட் ரிப்ளை

தொடர்ந்து அந்த பாட்டி, நாளைய வானிலை எப்படி இருக்கும் என்று தயக்கத்துடன் கேட்கிறார். அதற்கு கூகுள் அசிஸ்டென்ட் ரிப்ளை செய்யத் தொடங்குகிறது. கூகுள் குரலை கேட்டதும் அந்த பாட்டி திகைப்பூடனும் ஆச்சரியத்துடனும் இருக்கையில் இருந்து எழுந்து நிற்கிறார். இந்த காட்சி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் கூகூ என்ற வார்த்தை

இந்த வீடியோவை ஜென்னி வீவர் "கடவுள் உன்னிடம் பேசும் முதல் முறை" என்ற தலைப்பில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வரை 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று வருகிறது.

பலரும் தங்களுடைய கருத்துகளை கமென்ட்டில் பதிவிட்டு வருகின்றனர். பலரும் பாட்டி கூறும் "கூகூ" என்ற வார்த்தை அழகாக இருக்கும் படி தெரிவிக்கின்றனர். இதையடுத்து "கூகூ" என்ற வார்த்தையும் வைரலாகத் தொடங்கி இருக்கறது.

அசிஸ்டன்ட் என்ற வார்த்தையை பூர்த்தி செய்யும்

அசிஸ்டன்ட் என்ற வார்த்தையை பூர்த்தி செய்யும்

கூகுள் அசிஸ்டன்ட் ஸ்பீக்கர்கள் உடனான அனுபவம் என்பது உண்மையாக புதிதாகவும் மாறுபட்டதாகவும் இருக்கும். தினசரி செய்திகள், ரிமெம்பர்கள், நோட்டிபிகேஷன் என பல பயன்பாடுகள் இருக்கிறது. நீங்கள் அலாரம் வைத்து படுத்தால் அதுவே எழுப்பிவிடும்.

ஃப்ரீயாக உள்ள நேரத்தில் கூகுள் ஸ்பீக்கர்கள் உடன் உரையாடல் நடத்தலாம். அசிஸ்டன்ட் என்ற வார்த்தையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சாதனம் செயல்படும்.

கூகுள் ஹோம் மினி விலை

கூகுள் ஹோம் மினி விலை

கூகுள் ஹோம் மினி அசிஸ்டென்ட் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.4,399 என கிடைக்கிறது. கூடுதல் தள்ளுபடியும் 1 வருட வாரண்டியும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
First Time God Speak to You: Elderly woman's reaction after Google Assistant Replies

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X