இனிமேல் தொடக்கூட மாட்டேன்: வீடியோ கேம் விளையாடிய சிறுவனுக்கு தந்தை கொடுத்த நூதன தண்டனை.!
தற்போது கல்வி, வேலை என அனைத்திற்கும் இணைய வசதி தேவைப்படுகிறது. குறிப்பாக இந்த இணைய வசதி மூலம் மனித குலம் பல்வேறு நன்மைகளைப் பெற்று வருகிறது என்பது தான் உண்மை. அதேபோல் வங்கி சார்ந்த பணிகள் முதல் தினசரி வேலை வரை அனைத்திற்கும் இந்த இணைய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
ஆனாலும் தற்போது சிறுவர்களின் கைகளில் ஸ்மார்ட்போன்கள் ஒரு கை விலாங்காகவே மாறிவிட்டன. அதாவது போனில் வீடியோ கேம்கள் விளையாடும் சிறுவர்கள் நாளடைவில் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் ஒரு தந்தை தன்னுடைய மகன் வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்து நிறுத்த விநோத தண்டனையை அளித்திருக்கிறார்.

தற்போது இது தொடர்பான பதிவுகள் தான் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சீனாவில் உள்ள ஷென்சான் எனும் பகுதியைச் சேர்ந்தவர் ஹுவாங். இவருடைய 11 வயது மகன் இரவு ஒரு மணிக்கு யாருக்கும் தெரியாமல் தன்னுடைய படுக்கையில் ஸ்மார்ட்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறான்.
மேலும் இதனை கவனித்த ஹுவாங் தன்னுடைய மகனுக்கு வித்தியாசமான தண்டனை ஒன்றை அளித்திருக்கிறார். அதாவது தொடர்ந்து 17 மணி நேரம் அந்த சிறுவனை வீடியோ கேம் விளையாட செய்திருக்கிறார் ஹுவாங். அதன்படி இரவு 1 மணி துவங்கி மாலை 6 மணி வரையில் இந்த சிறுவன் கேம் விளையாடி இருக்கிறான்.
கேம் விளையாடிய சிறுவன் ஒரு கட்டத்தில் வாந்தி எடுக்கவே அதன் பிறகு அவனைத் தூங்க அனுமதித்திருக்கிறார் அவனது தந்தை. மேலும் இது குறித்து அந்த சிறுவன் எழுதி உள்ள குறிப்பில் வீடியோ கேம் விளையாடுகையில் என் தந்தை என்னைக் கண்டுபிடித்துத் தண்டித்தார். குறிப்பாக எனக்கு வாந்தி வரும் வரை விளையாட வைத்தார்.

இரவு 1 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 17 மணி நேரம் விளையாடினேன். இனி 11 மணிக்கு முன் படுக்கைக்குச் செல்வேன் என உறுதி அளிக்கிறேன். குறிப்பாக வீடியோகேம் மற்றும் பொம்மைகளுடன் விளையாட மாட்டேன் என்று அந்த பதிவில் சிறுவன் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக இந்த பதிவை அவரது தந்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பதிவு தான் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல் எல்லை மீறி எந்நேரமும் வீடியோ கேம் விளையாடி கொண்டே போனால், நிச்சயம் அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகமாம். பின்பு வீடியோ கேம் மன அழுத்தம் மற்றும் எரிச்சலை அதிகமாய் உண்டாகுமாம். வன்முறை மிக்க வீடியோ கேம்களை விளையாடும் குழந்தைகள் கோபக்காரர்களாக வளர்வார்களாம்.

குறிப்பாக மிகவும் ஊற்று நோக்க வைப்பதால் நிச்சயம் வீடியோ கேம்கள் கண் பார்வைக் கோளாறுகாளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதேபோல் இதன் மூலம் மணிக்கட்டு, கைக்கு நடுவில் பாதிப்புகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் குழந்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டியது பெற்றோர்கள் கடமையாகும்.


Click it and Unblock the Notifications








