கூகுளின் முதல் சமூக வலைதளம் ஆர்குட் இனிமே கிடையாது

By Meganathan
|

ஆர்குட் கூகுளின் முதல் சமூக வலைதளம் இன்று முதல் இயங்காது, ஷாக் ஆகாதீங்க மக்களே இது மூன்று மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டது தான். செப்டம்பர் 30 முதல் மற்ற சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

 கூகுளின் முதல் சமூக வலைதளம் இனிமே கிடையாது

ஆர்குட் வலைதளம் 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது ஆனால் இது கூகுளின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவில்லை. ஆர்குட்டில் மொத்தம் எத்தனை பயனாளிகள் இருந்தனர் என்ற விவரத்தை கொடுக்க அந்நிறுவனம் மறுத்து விட்டது. கடந்த காலங்களில் யூ ட்யூப், ப்ளாகர் மற்றும் கூகுள்+ வரவை அடுத்து இதன் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆர்குட் சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் ஆர்குட் ப்ளாக் மூலம் அறிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. மேலும் இதே ஆண்டு தான் தற்போது பிரபலமாக இருக்கும் சமூக வலைதளமான பேஸ்புக்கும் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கூகுள்+ தளத்தின் உபயோகத்தை அதிகமாக்கும் முயற்சியாக கூகுள் யூ ட்யூப் வாடிக்கையாளர்கள் கருத்தை வெளிப்படுத்த கூகுள்+ பயன்படுத்த வேண்டும் என்ற முறையை அறிவித்தது.

Best Mobiles in India

English summary
Farewell Orkut Google's first social media Shutting down today. Here's is a brief history of orkut and some facts of orkut.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X