Subscribe to Gizbot

சமூக வலைத்தளங்களில் இருக்கும் ஹாட் பிரபலங்களின் பட்டியல்...!

Written By:

இன்று சமூகத்தில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் சோஷியல் மீடியா எனப்படும் சமூத வலைத்தளங்களின் பங்கு மிகவும் பெரியது.

எந்த ஒரு முக்கிய செய்திகளும் சில நிமிடங்களிலேயே பேஸ்புக் வந்துவிடுகின்றது நாமும் அதை மிக எளிதில் அந்த செய்தியை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

இதெல்லாம் கூட ஓ.கே ங்க ஆனா ஒரு சில பேர் அதை வெச்சு ரொம்ப சீன் போட்டுட்டு இருப்பாங்க ஏதாவது ஒரு பாட்டு கேட்டுட்டு இருப்பாங்க உடனே பேஸ்புக்ல listening Kolaveri song feeling like yarayathu kollanum அப்படின்னு போடுவாங்க பாருங்க நம்மில் பல பேர் செம கடுப்பாய்டுவாங்க.

இதுகூட பரவாலைங்க ஒரு பொண்ணு Good Morning னு ஒரு ஸ்டேட்டஸ் போட்ருச்சுனா போதும் 100 லைக் 70 கமெண்ட் இதுபத்தாதுன்னு இன்பாக்ஸ் ல போய் ஒரு கும்பல் குட் மார்னிங்க சொல்லிட்டு இருக்கும் இது எல்லதையும் கூட பொறுத்துகலாம்ங்க அந்த Good Morning ஸ்டேட்டஸ ரெண்டு பேர் ஷேர் பண்ணிருப்பாங்க பாருங்க அத பாத்தவுடனே நீங்க என்ன கேக்க வர்றிங்கன்னு புரியுது விடுங்க விடுங்க.

இதபத்தி இன்னும் நம்ம டீப்பா டிஸ்கஸ் பண்ணலாம் தான், ஆனா பேஸ்புக்ல இருக்கற போராளிகள் இப்படி எங்களை பத்தி எழுதிட்டயேன்னு டென்ஷன் ஆயிருவாங்க அதனால இதை விட்டுட்டு நம்ம மேட்டருக்கு வருவோம்.

பேஸ்புக்ல அடிக்கடி சில கருத்துக்களை போட்டு பரபரப்பு ஏற்படுத்தும் பிரபலங்களுக்கு பஞ்சமில்லை இது நாம் அறிந்ததே.

அதன்படி அதிலும் டாப் 10 இருக்காங்க அவங்க யாருன்னு நாம்ம தெரிஞ்சுக்கலாமா இதோ இவங்கதாங்க அவுங்க....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிரியங்கா சோப்ரா

#1

அம்மணி தாங்க முதல் இடம் பிடிச்சிருக்காங்க காரசாரமான கருத்துக்களை பேஸ்புக்ல எழுதுறதுல இவங்க டான் டாப்

ஷாரூக் கான்

#2

ரஜினியை வைத்தே பெரிய ஆள் ஆக நினைக்கும் ஷாரூக் இரண்டாம் இடங்க

சல்மான் கான்

#3

மான் வேட்டை எல்லாம் வெற்றிகரமா முடிச்சிட்டு தன்னோட செகண்ட் இன்னிங்ஸ்ல பாலிவுட்டையே தற்போது கலக்கி வருகிறார் சுவாமிஜீ சல்மான்

கரீனா கபூர்

#4

இதோ வந்தாச்சுல கரீனா... இவங்க ரொம்ப ஓபனா பேசுவாங்கன்னு உங்களுக்கே தெரியும்.. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ...திருமணத்திற்கு முன்பே எனக்கும் சயீப்புக்கும் ஹனி மூன் முடிந்து விட்டது என்று மேடம் சொல்லியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அக்ஷய குமார்

#5

இவர்தாங்க பாலிவுட்ல பெரிய ஆக்ஷன் ஹிரோ ஓங்கி அடிச்சா கார்லாம் அப்படியே அப்பளமாக்கிடுவாரு இவரும் பேஸ்புக்ல ரொம்ப பிரபலம்ங்க

சயீப் அலிகான்

#6

கரினாவின் கணவரான இவரை அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன்... இவரும் எப்பவுமே பேஸ்புக்ல ஆக்டிவ்தான்... எனக்கொரு டவுட்டுங்க இவரும் கரீனாவும் எப்ப பாத்தாலும் பேஸ்புக்லயே இருக்காங்க ஒருவேளை ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருந்தா கூட பேசிக்கிறது எல்லாம் பேஸ்புக்ல தானோ...ஒரு காபி என் ரூமுக்கு கரீனா...

அமிதாப் பச்சன்

#7

இவர் எப்பவும் ஆன்லைன் தாங்க உலக நடப்பகளில் அதிக ஆர்வம் உடையலர்

பர்கான் அக்தர்

#8

இவர பத்தி நமக்கு அதிகம் தெரியாதுங்க ஆனால் இவரும் அதிக நேரம் பேஸ்புக்ல தான் இருக்காரு...கொஞ்ச நாள்ல ஏதாவது நியூஸ் மாட்டும் அப்ப பாத்துகலாம் விடுங்க

சன்னி லியோன்

#9

இவங்களுக்கு அறிமுகம் தேவையில்லை....ம்ம்ம்ம் நெக்ஸ்ட் நெக்ஸ்ட்

ரித்திக் ரோஷன்

#10

பட்டியலில் இறுதியாக இடம் பிடித்திருப்பவர் நம்ம ரித்திக தாங்க...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot