பூமி நோக்கி வரும் பேராபத்து.. ஆண்டின் இறுதியில் இப்படி ஒரு நிகழ்வா? உண்மை இதுதான்!

|

2020 உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று யாரிடமாவது நாம் கேள்வி கேட்டால் நிச்சயமாகக் கோபித்துக்கொள்வார்கள். சிலருக்கு அடி உதை விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே ஸ்தம்பித்துவிட்டது. இன்னும் மனிதர்களால் இயல்பு வாழ்க்கைக்கு மீளமுடியவில்லை. இப்படி இருக்கையில் 2020-ல் மற்றொரு பேராபத்து நெருங்கிக்கொண்டிருந்தது என்று புதிய தகவல் வைரல் ஆகியுள்ளது.

2020 என்பது ராசி இல்லாத ஆண்டா?

2020 என்பது ராசி இல்லாத ஆண்டா?

இந்த ஆண்டு முழுவதிலும் பல்வேறு ஆபத்துகளை மக்கள் சந்தித்துள்ளனர். பல பகுதிகளில் வெள்ளம், நிலநடுக்கம், முக்கிய பிரபலங்களின் மரணம், வெடிகுண்டு விபத்து, எல்லையில் பதட்டம் என்று இந்த 2020ம் ஆண்டில் ஏற்பட்ட சோதனைகளுக்குப் பஞ்சமே இல்லை. 2020 என்பது ராசி இல்லாத ஆண்டாக பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் உலகில் புதிதாக மற்றொரு பேராபத்து ஏற்பட இருப்பதாக கூறும் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எதிர்பார்த்திடாத பேராபத்து

எதிர்பார்த்திடாத பேராபத்து

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த பதிவில் இந்த மோசமான 2020 ஆண்டின் இறுதியில் உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்திடாத ஒரு பேராபத்தை எதிர்கொள்ளப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்த்திடாத இந்த பேராபத்து அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலின் தினத்திற்கு முந்தைய நாள் அன்று ஏற்படக்கூடும் என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமி நோக்கிப் பயணிக்கும் சிறுகோள்

பூமி நோக்கிப் பயணிக்கும் சிறுகோள்

குறிப்பாக இந்த பேராபத்து பூமிக்கு வெளியிலிருந்து ஒரு சிறுகோள் ரூபத்தில் நம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகமாகப் பூமி நோக்கிப் பயணித்து வரும் இந்த சிறுகோள் பூமியை நெருங்கினால் பேரழிவு நிச்சயம் ஏற்பட வாய்ப்புள்ளது. 2020 பெரிய பாதிப்புடன் நிறைவுபெறும் என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் ஆபத்து உள்ளதா?

உண்மையில் ஆபத்து உள்ளதா?

வலைத்தளத்தில் வைரல் ஆகிவரும் இந்த பதிவின் பின்னணியில் உள்ள உண்மையை ஆராய்ந்துள்ளோம், அதன்படி நவம்பர் 2ம் தேதி சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருகிறது என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், இந்த சிறுகோளானது, பூமியிலிருந்து சுமார் 2,60,000 மைல் தொலைவில் பூமிக்கு மிக அருகாமையில் நகர்ந்து செல்லும் என்று தெரிகிறது. இதனால் பூமிக்குப் பெரியளவில் ஆபத்து என்பது ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதே உண்மை.

ஆபத்து எத்தனை சதவீதம் தெரியுமா?

ஆபத்து எத்தனை சதவீதம் தெரியுமா?

இருந்தாலும் இதில் உள்ள கணிக்கப்பட்ட ஆபத்து என்பது 0.41 சதவீதம் என்றும் தகவல் தெரிவிக்கிறது. கூடுதலாக நாசா இது பற்றி என்ன கூறியுள்ளது என்று ஆராய்ந்த பொழுது, பூமியை நோக்கி வரவிருக்கும் சிறுகோள் 6.5 அடி நீள அளவில் இருக்கும் என்றும், இவை ஒருவேளை தனது பாதையிலிருந்து பூமி நோக்கி, பூமிக்குள் நுழைய முற்பட்டால் சிறுகோளின் அளவு மற்றும் வேகம் காரணமாக அது எரிந்து சாம்பலாகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது நாசா விளக்கம்

இதற்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது நாசா விளக்கம்

சில நேரங்களில் எரிந்து விழும் சிறுகோள் துகள்கள் சிறிய அளவுக் கற்களாக மட்டும் சில பகுதிகளில் விழுவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. இதனாலும் எந்த ஆபத்தும் இல்லை என்று நாசா உறுதிப்படத் தெரிவித்துள்ளது. ஆகையால் 2020ல் பூமிக்குப் பேராபத்து என்று எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்று நாசா கூறியுள்ளது. போலி செய்திகளைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Fact Check: Truth Behind Netizens warn of asteroid hit a day before US elections : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X