'வாவ்' சொல்ல வைக்கும் புதிய ஃபேஸ்புக் வசதி!

Posted By: Staff

சோஷியல் மீடியா போகின்ற வேகத்தை பார்த்தால் இனி கிராமத்தில் உள்ள மக்கள் கூட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற விஷயங்ளை பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் போல் இருக்கிறது. அதிலும் ஃபேஸ்புக்கில் நாளுக்கு நாள் நிறைய மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது. பல புதிய வசதிகளை சேர்க்க இருக்கிறது ஃபேஸ்புக்.

உதாரணத்திற்கு, ஃபேஸ்புக்கில் விருப்பமான தகவல்கள் அல்லது புகைப்படங்களை "லைக்" என்ற வாசகத்தை தேர்வு செய்து, விருப்பத்தை தெரிவிப்பது வழக்கம். இதுவே வாவ், லவ், பூம் போன்று உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு டைப் தான் செய்ய வேண்டும். இனி உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கும் பட்டன் ஆப்ஷன் கொடுக்க இருக்கிறது ஃபேஸ்புக்.

'வாவ்' சொல்ல வைக்கும் புதிய ஃபேஸ்புக் வசதி!

ஃபேஸ்புக் வளர்ச்சியை பார்த்தால், மனதில் நினைத்தாலே போதும், அதுவும் ஃபேஸ்புக்கில் வந்துவிடும் போல் இருக்கிறது என்று வேடிக்கையாக கூட தோன்றுகிறது. ஆனால் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சோஷியல் மீடியா மக்களிடம் பெற்று வரும் வரவேற்பு நிச்சயம் பாராட்டுதற்குறிய ஒன்று தான்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot