பொய் செய்தி போடுபவர்களுக்கு ஆப்பு வைத்த ஃபேஸ்புக்

Written By:

ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் ஒவ்வொரு நாளும் அதன் குறைகளை நிவர்த்தி செய்து மெருகேறி வரும் நிலையில் தற்போது பொய் செய்திகளை பரப்பும் பக்கங்களில் விளம்பரங்களை நிறுத்த அதிரடியாக முடிவு செய்துள்ளது. பொய்செய்தி, வதந்திகளை ஊக்குவிக்க கூடாது என்ற சமூக அக்கறையில் ஃபேஸ்புக் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பொய் செய்தி போடுபவர்களுக்கு ஆப்பு வைத்த ஃபேஸ்புக்

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கூறியதாவது: பொய் செய்திகளை பரப்பும் பக்கங்களில் விளம்பரங்களை நிறுத்துவதன் மூலம் பொய் செய்திகள் மற்றும் வதந்திகள் குறைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன்மூலம் வருமானம் பெறுபவர்களுக்கு இதுவொரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள்து.

பரபரப்பான செய்திகளை திரித்து கூறி அதிக பயனாளிகளை தங்கள் பக்கம் இழுத்து அதன் மூலம் விளம்பரங்களில் வருமானம் பார்த்து வருபவர்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு ஆப்பு என்று கூறப்படுகிறது. அதேபோல் இன்னொருவர் கூறிய கருத்துக்களை திரும்ப திரும்ப பதிவு செய்பவர்களுக்கும் விளம்பரம் கட் செய்யப்படும் என்று ஃபேஸ்புக் கூறியுள்ளது.

ஐபோன் 8, 7எஸ் மற்றும் 7எஸ் ப்ளஸ் : இந்திய விலை நிர்ணயம், வெளியீடு மற்றும் அம்சங்கள்.!

மேலும் பொய்ச்செய்திகளை நிறுத்தியது குறித்து உறுதி செய்யப்பட்டால் மீண்டும் அதே பக்கத்திற்கு விளம்பரம் தரப்படும் என்றும் இதுகுறித்து மூன்றாவது நிறுவனம் ஒன்று கண்காணிக்கும் என்றும், அந்த கண்காணிப்பின் அறிக்கையை பொறுத்து மீண்டும் விளம்பரம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்த போதே ஃபேஸ்புக் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டது.இதனால் ஓட்டுக்காக வதந்தி பரப்புவது பெரும்பாலும் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தற்போது அனைத்து பயனாளிகளின் கருத்துக்களில் உள்ள உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருவதாகவும், இதற்கு பிரிட்டன் நிறுவனங்களின் உதவியை ஃபேஸ்புக் நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நிறுவனம் மூன்று முக்கிய விஷயங்களை கவனிக்கின்றது.

1. தவறான செய்திகளின் மூலம் பொருளாதாரத்தை ஏற்ற-இறக்கமாக செய்வதை தடுப்பது

2.தவறான செய்தி மூலம் புதிய பொருள் ஒன்றை புரமோட் செய்வது

தவறான செய்திகள் மூலம் மக்களிடம் இருந்து சலுகைகள் அல்லது நிதியை பெறுதல்

Read more about:
English summary
Facebook has announced today that it will stop pages from using advertisement service that spread false news.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot