Just In
- 6 min ago
இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
- 22 min ago
5ஜி போன் இல்லையா? அப்போ உங்க காட்டில் மழைதான்! அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!
- 1 hr ago
பட்ஜெட் விலையில் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
- 1 hr ago
பள்ளி, கல்லூரி மாணவர்களை குஷிப்படுத்தும் பட்ஜெட் விலையில் புதிய Lenovo லேப்டாப் அறிமுகம்!
Don't Miss
- News
தமிழ்நாடு மாணவர்களுக்கு எத்தனை இன்னல்கள்.. அஞ்சல் தேர்வு படிவத்தில் குளறுபடி.. சு.வெங்கடேசன் கண்டனம்
- Sports
1.5 வருட காத்திருப்புக்கு நியாயம் கிடைக்குமா? கே.எஸ்.பரத் vs இஷான் கிஷான்.. யார் விக்கெட் கீப்பர்??
- Finance
விடாமல் துரத்தும் Layoff.. Pinterest, ஆட்டோடெஸ்க் அறிவிப்பு.. பீதியில் டெக் ஊழியர்கள்..!
- Lifestyle
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
- Movies
மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற பிரபல இந்திய இசையமைப்பாளர்... பிரபலங்கள் வாழ்த்து!
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புத்தாண்டு கொண்டாட்டம்: பேஸ்புக், வாட்ஸ்புக் தளங்கள் புதிய மைல்கல்களை எட்டியது
புத்தாண்டு பிறந்து 4 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், பேஸ்புக்கின் நேரலை ஒளிபரப்பு முறையில், அந்நிறுவனம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன்படி, உலகமெங்கும் உள்ள 10 மில்லியனுக்கும் அதிகமானோர், தங்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை பேஸ்புக்கின் நேரலை ஒளிபரப்பு மூலம் தங்கள் சமூகங்களில் பகிர்ந்து கொண்டதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேஸ்புக் தயாரிப்பு மேலாளரான எரிக் கான்னோலி, தனது பிளாக் இடுகை ஒன்றில் கூறியிருப்பதாவது, "கடந்தாண்டை விட 47 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நேரலை ஒளிபரப்பை பகிர்ந்து, கடந்தாண்டின் நேரலை ஒளிபரப்பு செயல்பாட்டில் கடந்த இரவில் ஒரு உச்சத்தை எட்டியது.
தாங்கள் எங்கிருந்தாலும் 2018 ஆண்டிற்கான கவுண்டனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மக்கள் அதிக உற்சாகமாக இருந்தனர். டிசம்பர் மாதத்தின் ஒரு சாதாரண நாளுடன் ஒப்பிட்டால், புத்தாண்டு விழாவை தங்கள் நண்பர்களுடன் ஒளிபரப்பைப் பகிர்ந்து கொள்வதில் பலரும் 3 மடங்கு ஆர்வம் காட்டியது அறிய முடிந்தது. இதன்மூலம் நேரலை ஒளிபரப்பில் உன்னதமான நாளாக புத்தாண்டு தினம் மாறியது" என்று தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு பிறப்பு என்பது உலகமெங்கும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய நிகழ்வு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதோடு, நேரலை ஒளிபரப்பிற்கும் ஒரு சிறந்த நேரமாக உள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு பயனர்களுக்கு நேரலையில் யதார்த்தமான மிகைப்பு (ஆக்யூமெண்ட்டு ரியாலிட்டி தன்மைகள் மற்றும் பார்ட்டி தொப்பிகள் போன்ற பல்வேறு நேரலை அம்சங்களை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன்மூலம் பயனர்களுக்கு நேரலை ஒளிபரப்பை அதிக பொழுதுபோக்கு நிறைந்ததாக அமைக்க, கூடுதல் விருப்பத்தேர்வுகள் அளிக்கப்பட்டது.
மேற்கூறிய நேரலை வீடியோக்களைப் பார்த்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடாத பேஸ்புக் நிறுவனம், "நீங்கள் விரும்பும் மக்களோடு உங்கள் அனுபவங்களை நேரடியாக பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்புக் நேரலை மூலம் தாங்கள் கொண்டாடிய இடத்தில் தொடர்ந்து இருக்க முடியாவிட்டாலும், அதன் நினைவுகளில் தொடரலாம்" என்று மட்டும் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட வாட்ஸ்அப்பில், புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான 75 பில்லியனுக்கும் அதிகமான செய்திகளை, அதன் பயனர்கள் அனுப்பி, ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. வாட்ஸ்அப் அதிகளவிலான பயன்பாட்டில் இருந்ததால், இந்தியாவில் இருந்த சில பயனர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சேவையை அளிப்பதில் தடங்கல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
வாட்ஸ்அப்பில் பதிவுசெய்துள்ள எண்களின் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கும் பயனர்கள் அதிகளவில் பயன்படுத்தி, செய்தி அனுப்பும் தளமான வாட்ஸ்அப் செயல்படுவதில் தடங்கல் ஏற்பட்ட போதிலும், அது 2 மணிநேரத்தில் சரிசெய்யப்பட்டது. எனினும் இந்த சாதனையில் ஒரு வேதனை என்பது போல, பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் விண்டோஸ் ஃபோன்களுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் சேவைகளை நிறுத்தி கொள்கிறது.
இது குறித்து வென்ச்சர்பீட் செய்தியில், குறுஞ்செய்தியின் வரலாற்றில் ஒரே நாளில் அனுப்பப்பட்ட அதிகபடியான செய்திகள் என்ற புதிய சாதனையை இது படைத்துள்ளது. முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சாதனை படைக்கப்பட்டிருந்தது.
இதில் 63 பில்லியன் செய்திகள் அனுப்பப்பட்டிருந்தது. புதிய சாதனையின் 75 பில்லியன் என்ற எண்ணிக்கையில், 13 பில்லியன் படங்களும் 5 பில்லியன் வீடியோக்களும் உட்படுவது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470