தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் நிர்வாகிகள்! கண்டிக்கும் ஃபேஸ்புக்!

Posted By: Staff

இன்டர்வியூவிற்கு வருபவர்களிடம் ஃபேஸ்புக்கின் பாஸ்வேர்டு கேட்கும் நிறுவன உயர் அதிகாரிகளை கண்டித்துள்ளது ஃபேஸ்புக்.

ஆம்! இன்ட்ர்வியூவிற்கு வருபவர்களிடம் இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கின் பாஸ்வேர்டு கேட்கப்படுகிறது என்று ஒரு பகீர் ரிப்போர்ட் வெளியானது. இது நிச்சயம் படித்த பட்டதாரிகளுக்கும், வேலை தேடும் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். இது போல் வேலை தேடி, இன்டர்வியூவிற்காக வருவோரிடம் ஃபேஸ்புக்கின்

பாஸ்வேர்டு மற்றும் அதன் முழு விவரத்தினையும் கேட்பது தவறான ஒன்று என்று கூறியுள்ளது ஃபேஸ்புக். அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக் என்பது ஒருவருடைய தனிப்பட்ட விஷயம்.

தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் நிர்வாகிகள்! கண்டிக்கும் ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக்கின் பாஸ்வேர்டு மற்றும் அதன் முழு முகவரியின் விவரத்தினையும் கேட்பது என்பது ஒருவருடைய சுதந்திரத்தை பறிப்பது போல் ஆகும். இதனால் இன்டர்வியூவிற்கு வருவோர்களிடம் ஃபேஸ்புக்கின் பாஸ்வேர்டு மற்றும் அதன் விவரங்களை பற்றி கேட்க கூடாது என்று கடுமையாக கண்டித்து கூறியுள்ளது ஃபேஸ்புக்.

சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக்கில் உள்ள ப்ரொஃபைல்களின் தகவல்கள் மூலம் இப்போதெல்லாம் வேலையும் தேடப்படுகிறது. இப்படி ஒரு வசதியை ஏற்படுத்தியது எளிதாக வேலை தேடி கொள்வதற்காக மட்டும் தானே தவிர, ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களை ஆராய்வதற்காக அல்ல என்பதையும் தெளிவுபடு்த்தியுள்ளது ஃபேஸ்புக்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot