ஃபேஸ்புக் அக்கவுண்டிற்குள் நுழைய மேலும் ஒரு பாதுகாப்பு அம்சம்.!

ஃபேஸ்புக் தனது பயனாளிகளின் டேட்டாக்களை பாதுகாப்பதில் பெரும் அக்கறை செலுத்தி வருகிறது.

|

சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் கேம்பிரிட்ஜ் அனால்டிகாவுக்கு தங்களது பயனாளிகளின் டேட்டாக்களை கொடுத்ததாக உலக மீடியாக்களின் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சம்பவத்திற்கு பின்னர் ஃபேஸ்புக் தனது பயனாளிகளின் டேட்டாக்களை பாதுகாப்பதில் பெரும் அக்கறை செலுத்தி வருகிறது.

ஃபேஸ்புக் அக்கவுண்டிற்குள் நுழைய மேலும் ஒரு பாதுகாப்பு அம்சம்.!

இந்த பிரச்சனையால் ஃபேஸ்புக் தங்கள் பயனாளிகளின் விபரங்களை காப்பதில் பலவீனமாக இருந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. கேம்பிரிட்ஜ் நிறுவனம் டேட்டாக்களை முறைகேடாக பயன்படுத்தியதே இந்த விளைவுகளுக்கு காரணமாக உணரப்படுகிறது. இருப்பினும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா முறைகேடு நிகழ்ச்சிக்கு பின்னர் பயனாளீகளின் பாதுகாப்பு மற்றும் ரகசியங்களை காப்பதில் ஃபேஸ்புக் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஃபேஸ்புக் பயனாளிகளின் ரகசியங்களை காக்க ஃபேஸ்புக் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை கடைபிடித்து வருகிறது. இரண்டு விதமான உள்நுழைதல் என்று கூறப்படும் டூ ஃபேக்டர் ஆதன்சேஷன் அம்சத்தை ஃபேஸ்புக் கடைபிடிக்கவுள்ளது. இதன்படி ஃபேஸ்புக் பயனாளி யூசர்நேம் பாஸ்வேர்டு மட்டுமின்றி மேலும் ஒரு வசதியின் மூலம் தங்கள் அக்கவுண்டில் நுழைய முடியும். இந்த புதிய நடைமுறையை ஃபேஸ்புக் மிக விரைவில் கொண்டு வரவுள்ளது. மேலும் புதிய நடைமுறைக்கு ரிஜிஸ்டர் செய்ய போன் நம்பர் தேவையில்லை என்பதும் இந்த அதிகப்படியான பாதுகாப்பு அம்சம் பயனாளிகளின் ஃபேஸ்புக் அக்கவுண்டுக்கு கூடுதல் பாதுகாப்பு என்றும் நிறுவனம் கருதுகிறது. மிக விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

ஃபேஸ்புக் அக்கவுண்டிற்குள் நுழைய மேலும் ஒரு பாதுகாப்பு அம்சம்.!

இந்த கூடுதல் நடைமுறைக்கு ஃபேஸ்புக் பயனாளிகள் தங்கள் கூகுள் கணக்கை கொண்டும் உள்நுழையும் வகையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஃபேஸ்புக் கொண்டு வரவுள்ள மாற்றங்கள் குறித்து பார்ப்போம்

1. ஃபேஸ்புக் நிறுவனம் டூ ஃபேக்டர் ஆதன்சேஷன் என்னும் புதிய வசதியை கொண்டு ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு கொண்டு வரவுள்ளது. இந்த புதிய அம்சத்தை படிப்படியாக பயனாளிகள் புரிந்து கொள்ளும் வகையிலும், இந்த புதிய நடைமுறையின் மூலம் பயனாளிகள் தங்கள் அக்கவுண்டுக்கு செல்வதால் உள்ள பாதுகாப்பு குறித்தும், அதே நேரத்தில் பயனாளிகள் தவிர வேறு யாரும் அக்கவுண்டிற்குள் நுழைய முடியாதவாறு இந்த புதிய அம்சம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்தும் ஃபேஸ்புக் விரிவாக விளக்கவுள்ளது.

ஃபேஸ்புக் அக்கவுண்டிற்குள் நுழைய மேலும் ஒரு பாதுகாப்பு அம்சம்.!

2. மேலும் ஃபேஸ்புக் பயனாளிகள் இனிமேல் வேறு மூன்றாவது தரப்பினர்களின் செயலிகளை அனுமதிக்கப்போவதில்லை. அதேபோல் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற ரிஜிஸ்டர் செய்யும்போது போன் நம்பரை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த புதிய அம்சமான டூ ஃபேக்டர் ஆதன்சேஷன் குறித்து புரியாதவர்களுக்கு ஒரு எளிமையான விளக்கம் என்னவெனில் நீங்கள் உங்கள் அக்கவுண்டிற்குள் நுழையும்போது கூடுதலாக ஒரு பாதுகாப்புடன் கூடிய அம்சத்தை பின்பற்ற வேண்டும் என்பதே ஆகும். இந்த புதிய 2FA ஃபேஸ்புக் பயனாளிகள் பின்பற்ற தொடங்கியவுடன் அவர்களுக்கு ஒரு புதிய கோட் எண் அனுப்பப்படும். இந்த கோட் எண், வங்கியில் இருந்து அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டுக்குக் சமமானது.

ஃபேஸ்புக் அக்கவுண்டிற்குள் நுழைய மேலும் ஒரு பாதுகாப்பு அம்சம்.!

ஒவ்வொரு முறையும் நீங்கள் ஃபேஸ்புக்கில் நுழையும்போது இந்த கோட் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே அக்கவுண்டுக்குள் நுழைய முடியும். இதனால் நம்மை தவிர நமது அக்கவுண்டை வேறு யாரும் பயன்படுத்த வாய்ப்பே இல்லை. நமது மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும் இந்த ஓடிபி போன்ற கோட் எண் வசதிக்கு பயனாளிகளுக்கு நிச்சயம் பாதுகாப்பை தரும். மேலும் பொது இடத்தில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போது இந்த நடைமுறை மிகவும் பாதுகாப்பானது.

Best Mobiles in India

English summary
Facebook Two-Factor authentication will no longer need your phone number ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X