ஆகஸ்டில் அறிமுகமாகிறது ஃபேஸ்புக் டிவி காட்சிகள்

By Siva
|

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஃபேஸ்புக் டிவி ஆரம்பமாகவுள்ளது.

ஆகஸ்டில் அறிமுகமாகிறது ஃபேஸ்புக் டிவி காட்சிகள்

கடந்த ஜூன் மாதத்திலேயே ஹாலிவுட் ஸ்டுடியோக்களுடன் டிவி ஷோக்களை ஒளிப்பரப்புவது குறித்த பேச்சுவார்த்தையை ஃபேஸ்புக், நடத்தி வருகிறது. மேலும் ஃபேஸ்புக்கில் ஒரிஜினல் நிகழ்ச்சியையும் வெகுவிரைவில் இந்த டிவியில் எதிர்பார்க்கலாம்

இந்த நிலையில் புளூம்பெர்க் சமீபத்தில் அளித்த அறிக்கையில் ஃபேஸ்புக் டிவி வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி டிவி பங்குதாரர்கள் தங்களுடைய நிகழ்ச்சிகளின் முதல் பகுதியை ஃபேஸ்புக் டிவிக்காக முடித்து அனுப்பி வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

முதல்கட்டமாக இந்த டிவியில் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்காக காட்சிகள் ஒளிபரப்ப ஃபேஸ்புக் டிவி தயார் நிலையில் இருப்பதாகவும், இந்த டிவி நிகழ்ச்சிகளில் வரும் விளம்பர வருமானத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 45% கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இதுவரை ஃபேஸ்புக் டிவி குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்றாலும் ஒரே இரவில் அறிவிப்பு வெளிவந்து அடுத்த நாளே இந்த டிவி தொடங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பசுக்களின் இந்த விசித்திரமான நடவடிக்கையை நீங்கள் கவனித்தது உண்டா.?பசுக்களின் இந்த விசித்திரமான நடவடிக்கையை நீங்கள் கவனித்தது உண்டா.?

மேலும் எதிர்காலத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் நிகழ்ச்சிகளை ஃபேஸ்புக் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இந்த டிவி ஆயத்தமாகி வருகிறது. மேலும் மீடியா நிறுவனங்களான ATTN, Vox Media, BuzzFeed, மற்றும் Group Nine Media ஆகிய நிறுவனங்களுடனும் ஃபேஸ்புக் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஃபேஸ்புக் டிவி நிகழ்ச்சிகள் கடந்த ஜூன் மாதமே தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் ஒருசில தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக தாமதமாகி தற்போது ஆகஸ்ட் முதல் செயல்படவுள்ளது. அதே நேரத்தில் இதே காரணங்களுக்காக மேலும் சில காலம் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

யூடியூப் வீடியோக்கள், HBO, மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிகழ்ச்சிகளுக்கு இணையாக ஃபேஸ்புக் நிகழ்ச்சிகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் விளம்பரதாரர்களுக்கு இடையிலான கால அளவு அதிகமாக இருக்கும் என்றும் அந்த வகையில் எண்டர்டெயின்மெண்ட் டிவிக்கு உரிய அனைத்து அம்சங்களும் இந்த ஃபேஸ்புக் டிவியில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Facebook TV coming soon.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X