Home
Social media

மம்தா பானர்ஜியின் சர்ச்சைக்குரிய படத்தை நீக்குகிறது ஃபேஸ்புக்!

By Super

நெருக்கடி முற்றுவதால் மேற்கு வங்க முதல்மந்திரி மம்தா பானர்ஜி பற்றி கேலி செய்து வெளியான புகைப்படத்தினை ஃபேஸ்புக் நீக்க உள்ளது.

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில், மேற்குவங்க முதல் மந்திரி மம்தாபானர்ஜி பற்றி கேலி செய்வது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. அடுத்து அடுத்து மம்தாபானர்ஜி பற்றி கேலி புகைப்படங்கள் வரையப்பட்டும், அதற்கு பலமாதிரியான கருத்துக்களும் ஃபேஸ்புக்கில் வெளியானதால் பெரும் சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக, மேற்கு வங்க சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த படத்தை வெளியிட்டதாக கருதப்படும் பேராசிரியர் ஒருவரை அவர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மம்தா பானர்ஜியின் சர்ச்சைக்குரிய படத்தை நீக்குகிறது ஃபேஸ்புக்!

இதனிடையே, போலீசார் இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து சர்ச்சைக்குரிய புகைப்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

மம்தாவின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் குறித்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்த புகைப்படங்களை தனது பக்கத்திலிருந்து நீக்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இப்பிரச்னைக்கு ஃபேஸ்புக் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X