வரும் ஜூலையில் பேஸ்புக்கின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வெளியீடு? அம்சங்கள் கசிந்தது

|

முதல் முதலாக ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் தயாரிப்பில் பேஸ்புக் நிறுவனம் களமிறங்கி உள்ளதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் செய்திகள் வெளியானது.

வரும் ஜூலையில் பேஸ்புக்கின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வெளியீடு? அம்சங்கள்

கடந்தாண்டில் இருந்தே ஒரு டச்ஸ்கிரீன் அம்சத்துடன் கூடிய ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கரின் தயாரிப்பில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. சமீபத்தில் டிஜிடைம்ஸில் வெளியான ஒரு செய்தியில், இந்நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் சந்தைக்குள் நுழைவதற்கு ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கருக்குப் பதிலாக, அலோஹா மற்றும் ஃபியோனா என்ற இரு ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுடன் களமிறங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தச் செய்தியில், இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் அறிமுகம் எவ்வளவு விரைவில், அதாவது இந்தாண்டு மத்தியிலேயே இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அலோஹா மற்றும் ஃபியோனா ஆகியவை குறியீட்டு பெயர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் மேற்கூறிய சாதனங்களின் அறிமுகத்தின் போது, வேறு பெயர்களில் தான் அழைக்கப்படும்.

அந்தச் செய்தியின்படி, அலோஹா மற்றும் ஃபியோனா ஆகியவை 15-இன்ச் டச்ஸ்கிரீன்களைக் கொண்டதாக அமைந்து, எல்ஜி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை வரும் மே மாதத்தில், ஆரம்பநிலை அறிமுகம் செய்துவிட்டு, இந்த சாதனங்களின் ஒலி சார்ந்த தரம் மற்றும் மென்பொருள் சீரமைப்பு ஆகியவற்றை இன்னும் சிறப்புடையதாக மாற்றுவதில் கூடுதல் நேரத்தை செலவிடலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை வெளியிட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. சங்கிலி தொடர் தகவல்களின் கூட்டாக, இந்த செய்தி வெளியாகியுள்ளது.

அலோஹா மற்றும் ஃபியோனா ஆகியவற்றின் தயாரிப்பு, பேஸ்புக்கின் ரகசியமான கட்டிடமான 8 லேப்-பில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. முன்னதாக கூறப்பட்ட சாதனம், அதிக மேம்பட்ட வகையாக அமைந்து, போர்ட்டல் என்று அதிகாரப்பூர்வமான பெயரில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. இதில் வாய்ஸ் கமெண்டுகளை ஏற்றுக் கொள்ளும் அம்சம் இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும், அந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரில் பயனரை கண்டறியும் வகையில் முக அடையாளம் காணும் தொழிற்நுட்பத்தைக் கொண்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

பொசுக்கென்று கோபப்பட டோகோமோ: ஜியோவை மிஞ்சும் ரூ.82-ஐ அறிவித்துள்ளது.!பொசுக்கென்று கோபப்பட டோகோமோ: ஜியோவை மிஞ்சும் ரூ.82-ஐ அறிவித்துள்ளது.!

இந்நிலையில் கடந்த மாதம் வெளியான ஒரு செய்தியில், "போர்ட்டல்" என்ற பெயரில் ஒரு ஹோம் வீடியோசெட் சாதனத்தை அறிமுகம் செய்யும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் அம்சங்களாக கூறப்பட்ட காரியங்கள், அலோஹா-வில் இருப்பதாக கூறப்பட்ட முந்தைய காரியங்களோடு ஒத்துப் போவது வியக்கத்தக்க ஒன்றாகும். மேற்கூறிய போர்ட்டல், $499 (ஏறக்குறைய ரூ.31,735) என்ற விலை நிர்ணயத்தில் வெளியாகலாம் என்ற வதந்திகள் எழும்பின.

இந்நிலையில் டிஜிடைம்ஸில் வெளியான செய்தியில், போர்ட்டல் என்று அழைக்கப்படும் அலோஹாவில் அதிகளவிலான சமூக வலைத்தளங்களின் அம்சங்கள் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சோனி மற்றும் யூனிவேர்சல் மியூஸிக் ஆகிய நிறுவனங்களுடன் பேஸ்புக் கையெழுத்திட்டு, இந்த ஸ்மார்ட்போன்களில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஃபியோனா ஸ்மார்ட் ஸ்பீக்கரை குறித்து அறிய நீங்கள் அதிக ஆவல் காட்டினாலும், அதைக் குறித்து அந்தச் செய்தியில் அதிகம் குறிப்பிடவில்லை. அதனால் அந்தச் சாதனம் பெரும்பாலும் வீடியோ அழைப்பிற்கே, அதிக முக்கியத்துவம் அளிக்கலாம் என்ற முடிவிற்கு நாங்கள் வந்துள்ளோம்.

வாய்ஸ் தொடர்பான சாதனங்களின் சந்தைக்குள் பேஸ்புக் நிறுவனம் திடீரென நுழைகிறது என்ற இந்த செய்தி, அதிக ஆச்சரியத்தை அளிப்பதாக இல்லை. ஏனெனில் சமீபகாலமாக, வாடிக்கையாளர்களுக்கான பல சுவாரஸ்சியமான காரியங்களை உருவாக்குவதில், ஏஐ-ஆற்றல் கொண்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் ஈடுபட்டுள்ளன.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

தற்போதைய சந்தையை அமேசானின் ஈகோ ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒப்பீட்டில் கூகுல் ஹோம் சாதனமும் அவ்வளவு பின்தங்கிய நிலையில் இல்லை. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனமும், சிரி மூலம் இயக்கப்படும் ஹோம்போடு என்ற பெயரிலான சொந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook is reportedly working on two smart speakers which are codenamed as Aloha and Fiona. The devices are said to launch as soon as July this year with 15-inch LG touchscreens. The smart speakers are currently being manufactured by Facebook's secretive Building 8 lab.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X