Just In
- 16 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 19 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 19 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 20 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மெசேஞ்சர் கிட்ஸ் அப்ளிகேஷனை பேஸ்புக் நீக்கணும் : நிபுணர்கள் கருத்து
பேஸ்புக்கின் சிஇஓ-விற்கு நிபுணர்கள் அனுப்பிய ஒரு பொதுவான கடிதத்தில், "சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்து கொள்ள இளம் குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது" என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட, வீடியோ காலிங் மற்றும் மெசேஜ் செய்யும் அப்ளிகேஷனான மெசேஞ்சர் கிட்ஸின் செயல்பாட்டை, பேஸ்புக் நிறுவனம் நிறுத்தலாம் என்று தெரிகிறது. சமூக வலைத்தளங்களைக் குழந்தைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்களைக் குறித்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நல நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளதை தொடர்ந்து, இந்த அப்ளிகேஷனை பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் நிரந்தரமாக நீக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து பேஸ்புக் தலைமை பொறுப்பாளருக்கு நிபுணர்கள் எழுதிய ஒரு பொதுவான கடிதத்தில் கூறியிருப்பதாவது, "சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்து கொள்ள இளம் குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேஸ்புக்கின் முதல் சமூக வலைத்தள அப்ளிகேஷனான மெசேஞ்சர் கிட்ஸை நிறுத்துமாறு வலியுறுத்தவே, நாங்கள் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர். இந்தக் கடிதத்தில் டாக்டர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் நல நிபுணர்கள் மற்றும் அமெரிக்காவை மையமாக கொண்ட வர்த்தக நோக்கமில்லாத பிரச்சாரம் செய்யும் பல்வேறு நிறுவனங்களில் தலைமை வகிப்பவர்கள் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் அதில் கூறியிருப்பதாவது, "சமூக வலைத்தளங்களால் இளம் பருவத்தினர் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து கவலை அதிகரித்து நிலையில், குறிப்பாக பள்ளிப் பருவத்திலேயே பேஸ்புக்கின் ஒரு தயாரிப்பை பயன்படுத்த குழந்தைகளை ஊக்குவிப்பது பொறுப்பற்ற செயலாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மெசேஞ்சர் கிட்ஸ் அப்ளிகேஷன், கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. குழந்தைகளிடம் உள்ள டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போன் மூலம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள உதவும் வகையில் இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் பெற்றோரின் அனுமதியுடன் கூடிய தொடர்புகளை மட்டுமே குழந்தைகள் தொடர்பு கொள்ள முடியும் என்று பேஸ்புக் தரப்பில் கூறப்பட்டது.
இந்த அப்ளிகேஷனில் எந்தவிதமான விளம்பரங்களும் வருவதில்லை என்பதோடு, இந்த புதிய அப்ளிகேஷனில் கிடைக்கும் தகவல்களை விளம்பர பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படாது என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. ஆனால் அந்தக் கடிதத்தில் நிபுணர்கள் கூறுகையில், இந்த அப்ளிகேஷன் மூலம் குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த விளைவுகள் எதிர்மறையாக இருக்க வாய்ப்புள்ளது.
இளம் குழந்தைகள் இடையே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது சாதாரணமான ஒன்றாக மாறுவதோடு, தங்களின் முதல் கணக்கை துவக்க வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை அழுத்தம் குழந்தைகளின் மீது உருவாக்கப்படுகிறது.
இது குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளைச் சுட்டிக்காட்டி, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் நற்குணங்கள் மோசமான முறையில் பாதிக்கப்படலாம் என்ற தங்களின் கருத்தை வலியுறுத்தி உள்ளனர். இந்தக் கடிதத்தை எழுதியவர்கள், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி ஏற்படும் மனஅழுத்தங்கள் இல்லாமல் இளம் குழந்தைகள் வளரும் வகையில், அவர்களை விட்டு விடுமாறு, பேஸ்புக் சிஇஓ-விடம் கேட்டு கொண்டுள்ளனர்.
இது குறித்து ஒரு பேஸ்புக் செய்தித்தொடர்பாளர் கூறியதாக த கார்டியன் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட செய்தியில், "குடும்பங்களுக்கு ஏற்ற முறையில் குழந்தைகளுக்கு சிறந்த அனுபவத்தை மெசேஞ்சர் கிட்ஸ் அளிக்க வேண்டும் என்பதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். மெசேஞ்சர் கிட்ஸ் எந்தவிதமான விளம்பரங்களும் வருவதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் சுகாதார செயலாளர் ஜிரிமி ஹன்ட், இந்த சமூக வலைத்தளத்தை குழந்தைகளிடம் இருந்து விலகி இருக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் எச்சரிக்கை விடுத்தார். அது குறித்து ஒரு டிவிட்டர் இடுகையில் அவர் கூறுகையில், "குறைந்த வயதுள்ளவர்கள் தங்களின் தயாரிப்பை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையிலான செயல்பாட்டுடன் நாங்கள் செயல்படுவோம் என்று என்னிடம் பேஸ்புக் நிறுவனம் கூறியது. ஆனால் அதற்கு பதிலாக, இளம் குழந்தைகளைத் தான் அவர்கள் குறிவைத்து செயல்படுகின்றனர். தயவுசெய்து எங்கள் குழந்தைகளை விட்டு விலகி இரு பேஸ்புக், பொறுப்பாக செயல்படு!" என்று தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470