பேஸ்புக்கில் தகவல்கள் மீண்டும் திருட்டு.! பயனர்கள் அதிர்ச்சி.!
இந்நிலையில், கடந்த சில மாதம் பேஸ்புக்கில் மீண்டும் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல் எழுந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல்கள் எழுந்துள்ளது.
பேஸ்புக் சமூக வலை தளத்தில் அண்மை காலமாக மற்றவர்களின் கணக்கு விவரங்கள் திருடப்படுவது தொடர் கதையாகி விட்டது. ஏற்கனவே அடுத்தவர்களின் கணக்கு விவரங்களை திருடி அமெரிக்காவில் தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு தனியார் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதை பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதம் பேஸ்புக்கில் மீண்டும் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல் எழுந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல்கள் எழுந்துள்ளது.

பேஸ்புக் தகவல்கள் திருட்டு:
பேஸ்புக் சமூக வலை தளத்தில் கடுமையான பாதுகாப்பையும் மீறி மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த மாதம் (செப்டம்பர்) அறிவிக்கப்பட்டது.
அதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என உறுதி செய்ய முடியவில்லை. இது மோசமான நடவடிக்கை என பேஸ்புக் நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

1 கோடி பேரின் தகவல்கள் திருட்டு :
அவற்றில் 2 கோடியே 90 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 1 கோடியே 15 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்களான டெலிபோன் நம்பர், இமெயில் முகவரிகள் திருடப்பட்டுள்ளன.

முழுவிவரமும் திருட்டு :
இவை தவிர 1 கோடியே 40 லட்சம் பேரின் பெயர், பாலினம், மொழி, உறவு முறை, மதம், சொந்த ஊர், தற்போது குடியிருக்கும் நகரம், பிறந்த தேதி, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு இருக்கின்றன.

விசாரணைக்கு ஒதுப்புழைப்பு:
மேற்கண்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில், ஃபேஸ்புக் அக்சஸ் டொக்கன்களை ரீசெட் செய்து இருப்பதாக
பேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம் என
பேஸ்புக்' நிறுவனம் தெரிவித்துள்ளது


Click it and Unblock the Notifications