சிக்கலின் விளிம்பில் நிற்கும் பேஸ்புக் அறிவித்துள்ள 'பல்க் ஆப் ரிமூவல்' அம்சம்.!

  சமூக வலைதளமான பேஸ்புக், தனது தகவல்களை பிரிட்டிஷ் கன்சல்டன்சி நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா நிறுவனத்துடன் பகிர்ந்துகொண்டது என்பதை அந்நிறுவனத்தின் சி.ஈ.ஓ மார்க் சுக்கர்பார்க் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பிறகு மிகவும் சோதனையான காலத்தில் உள்ளது. ஏனெனில், உலகம் முழுவதிலிருந்தும் பல்வேறு மக்களின் எதிரிப்புகளை சந்தித்து வருகிறது. மேலும், பேஸ்புக் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், #DeleteFacebook என்னும் ஹேஸ்டேக் சிலகாலம் டிரண்டாகி வந்தது.

  சிக்கலின் விளிம்பில் நிற்கும் பேஸ்புக் அறிவித்துள்ள பல்க் ஆப் ரிமூவல்!

  பேஸ்புக் நிறுவனம் அதனால் ஏற்பட்ட சேதத்தை கட்டுபடுத்தவும், பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரவும் கடுமையாக முயற்சிக்கிறது. இப்போது சத்தமே இல்லாமல் புதிய வசதி ஒன்றை பேஸ்புக் தளத்தல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் பயனர் ஒரே கிளிக் மூலம் மூன்றாம் தரப்பு செயலிகள்(Third party apps) மற்றும் அவற்றின் பதிவுகளையும் நீக்க முடியும். மாட் நவரா என்ற நிறுவனம், இந்த மொத்தமாக நீக்கும் வசதியை கண்டறிந்து வெளிப்படுத்தியது.

  பேஸ்புக் செட்டிங்கில் உள்ள ஆப்ஸ் பகுதிக்கு சென்று எவ்வளவு ஆப்ஸை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். பின்னர் திரையின் மேல் பகுதியில் தோன்றும் 'Remove' தேர்வின் மூலம் அனைத்து ஆப்ஸையும் நீக்க முடியும்.

  நீக்கிய பின்னர் ஒரு சிறிய திரை தோன்றி, அந்த செயலிகளால் உங்கள் டைம்லைனில் பதிவிடப்பட்ட பதிவுகளை நீக்கலாமா என கேட்கும். இந்த வசதி வருவதற்கு முன்பு, ஒவ்வொரு செயலியாக தேர்வு செய்து நீக்க வேண்டும். இதற்கு அதிக நேரமும் எடுக்கும்.

  அதே போல், பயனர் ஒரு செயலியை மூன்று மாதங்களாக பயன்படுத்தவில்லை என்றால் அது தானாகவே நீக்கப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், இது ஆரம்பம்தான். எதிர்காலத்தில் இது போன்ற பல கருவிகள் வெளியிடப்பட்டு பயனர்களின் இரகசிய தகவல்கள் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

  கடந்த மாதத்தின் இறுதியில், பேஸ்புக் நிறுவனம் தனது செட்டிங் பகுதியின் வடிவமைப்பு மற்றும் லேஅவுட்டில் பெரிய அளவிலான மாற்றங்களை செய்துள்ளது. 17வித ஆப்சன்ஸ் கொண்ட பழைய மெனுவைப் போல இல்லாமல், பயனர் மிகவும் எளியாக பயன்படுத்தும் வகையில் அனைத்து செட்டிங் மற்றும் டூல்ஸ் கொண்ட ஒரு பக்க மெனுவாக புதிய செட்டிங் மெனு உள்ளது.

  4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.!

  மேலும், பேஸ்புக் தனது தளத்தின் புதிய ப்ரைவசி மெனு சார்ட்கட் ஒன்றையும் சேர்த்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் அக்கவுன்ட் ப்ரைவசி செட்டிங்-ஐ மிக எளிதாக,எந்தவித கடின முயற்சியும் இன்றி மாற்றிக்கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் 'Access Your Information' என்ற இன்னொரு வசதியையும் கொண்டுள்ளது. இந்த வசதியின் மூலம் பயனர்கள், தங்களின் சமீபத்திய சமூகவலைதள செயல்பாடுகளையும், அங்கு பகிரப்பட்ட தனிப்பட்ட தகவல்களையும் பரிசோதிக்கவோ, நீக்கவோ முடியும்.

  Read more about:
  English summary
  Facebook has quietly added a new tool to its platform which lets users remove third-party apps and all the posts made by those apps at once. You can now go the Apps section of their Facebook settings and then click on any number of third-party apps. You will get a remove option and then a prompt to delete all posts those apps may have posted on your timeline.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more