இந்தியாவில் பேஸ்புக் பயனாளிகளின் எண்னிக்கை 112 மில்லியன்
இந்தியாவில் பேஸ்புக் பயனாளிகளின் எண்னிக்கை சுமார் 112 மில்லியனாக உள்ளது, உலகளவில் பேஸ்புக் அதிகம் பயன்படுத்துபவர்களில் அமெரிக்காவிற்கு அடித்த படியாக இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் பேஸ்புக் பயனாளிகளின் எண்னிக்கை 112 மில்லியன்
அமெரிக்காவை சேர்ந்த சமூக வலைதளமான பேஸ்புக் பயனாளிகளின் எண்னிக்கை இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 100 மில்லியனாக இருந்தது, மாத பயனாளிகளின் எண்னிக்கை செப்டம்பர் மாதம் 112 மில்லியனை அடைந்தது. இந்தியாவில் மாத பயனாளிகளின் எண்னிக்கை தற்சமயம் 52 மில்லியனாக உள்ளது.
[உபயோமான கூகுள் க்ரோம் பயன்பாடு மற்றும் தந்திரங்கள்]
உலகளவில் பேஸ்புக் பயனாளிகளின் எண்னிக்கை 1.35 பில்லியன், இதில் தினமும் பேஸ்புக் பயன்படுத்துவோர் 864 மில்லியன், பேஸ்புக் பயனாளிகளின் எண்னிக்கையில் தற்சமயம் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியா உள்ளது.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பேஸ்புக் வளர்ச்சி பாதையில் இருக்கின்றது, இன்னும் பெரிய சந்தை இங்குள்ளது, மேலும் பேஸ்புக் பயன்பாட்டை மேம்படுத்த எங்கள் பயனாளிகள் மற்றும் விளம்பரதாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் என பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் கிர்த்திகா ரெட்டி தெரிவித்தார்.
[லாவாவின் புதிய ஸ்மார்ட்போன் விலை ரூ.8,888]
மேலும் 112 மில்லியன் இந்திய பயனாளிகளில் சுமார் 99 மில்லியன் பயனாளிகள் தங்களது மொபைல் போன் மூலம் மாதம் ஒரு முறையேனும் பயன்படுத்துகின்றனர். சுமார் 45 மில்லியன் பயனாளிகள் மொபைல் போன் மூலம் தினமும் பேப்ஸபுக் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications