இனி பேஸ்புக்கில் அதுபோன்ற போஸ்ட் போட முடியாது: பேஸ்புக்கின் புதிய அறிவிப்பு.!

குறிப்பாக உயிரிழந்தவர்கள் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் தரக்குறைவான கருத்துக்களை சம்மந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பேஸ்புக்கிடம் புகார் தெரிவிக்கலாம்

|

பேஸ்புக் தொடர்ந்து பல்வேறு கட்டுபாடுகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, அதே சமயம் புதிய வசதிகளையும் சேர்க்கும் விதமாக உள்ளது. தற்சமயம் இந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருந்து மரணித்தவர்கள் பற்றி கேலி செய்யும் விதமாக பதிவு செய்யப்படும் போஸ்ட்களை நியூஸ் ஃபீடில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகள்

ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகள்

மேலும் உயிரழந்தவர்கள் பற்றி எழுதப்படும் தரக்குறைவான கருத்துகளை நீக்கும் வகையில் பேஸ்புக் தனது தள அமைப்பில் மாற்றங்களை செய்து இருக்கிறது. குறிப்பாக மரணத்தை பாராட்டும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகள் இனிமேல் கண்டிப்பாக பேஸ்புக்கில் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் விதிகளை மீறுவதாக அர்த்தமாகும்

முகநூல் விதிகளை மீறுவதாக அர்த்தமாகும்

இதற்குமுன்பு உயிரிழந்தவர்கள் பற்றி எழுதப்படும் தரக்குறைவான கருத்துகள் பேஸ்புக் விதிகளை எதிரானதாக கருதப்படவில்லை. தற்சமயம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களில் இவ்வாறான பதிவுகள் முகநூல் விதிகளை மீறுவதாக அர்த்தமாகும்.

புகார்  தெரிவிக்கலாம்

புகார் தெரிவிக்கலாம்

குறிப்பாக உயிரிழந்தவர்கள் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் தரக்குறைவான கருத்துக்களை சம்மந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பேஸ்புக்கிடம் புகார் தெரிவிக்கலாம் என பேஸ்புக் மேலாளர் ஹெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார் இதற்குமுன்பு கேலி செய்யும் வகையில் இருக்கும் பதிவுகளை சம்பந்தப்பட்டவர்களே தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 பிரபலங்களுக்கும் பேஸ்புக் பின்பற்ற இருக்கிறது

பிரபலங்களுக்கும் பேஸ்புக் பின்பற்ற இருக்கிறது

பின்பு உயிரிழந்தவர்கள் பயன்படுத்திய அக்கவுண்ட்களில் மரணித்தர்களே குற்றச்சாட்டு எழுப்ப முடியாது என்பதால் தற்சமயம் குடும்ப உறுப்பினர்கள் உயிரழந்தவர்கள் சார்பாக தரக்குறைவான பதிவுகளை பேஸ்புக்கிடம் கொண்டு செல்லலாம், இதே முறையை பிரபலங்களுக்கும் பேஸ்புக் பின்பற்ற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திடாத வேடிக்கையான உண்மைகள்.! இதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க!தொழில்நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திடாத வேடிக்கையான உண்மைகள்.! இதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க!

ஸ்பேம்

ஸ்பேம்

மேலும் மரணத்தவர்களின் அக்கவுண்ட்டில் பப்ளிக் கமெண்;ட் செய்ய அனுமதித்து இருந்தால், ப்ரோஃபைலில் அதிகப்படியான ஸ்பேம் செய்யும் கருத்துக்கள் பதிவு செய்யப்படும். இவ்வாறு நடக்கும் பட்சத்தில் இது சம்மந்தப்பட்டவரின் குடும்பத்தாருக்கு கண்டிப்பாக வருத்தத்தை ஏற்படுத்தும்.

உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்!உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்!

மெமோரலைஸ்டு அக்கவுண்ட்

மெமோரலைஸ்டு அக்கவுண்ட்

பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போர் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது கணக்குகளை மெமோரலைஸ்டு பட்டியிலில் சேர்க்கும் வசதியை பேஸ்புக் வழங்குகிறது. எனவே பேஸ்புக்கில் மெமோரலைஸ்டு அக்கவுண்ட்களுக்கு பயனர்கள் அஞ்சலி செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

Best Mobiles in India

English summary
Facebook Remove Messages Mocking Deaths : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X