ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய வசதி நண்பர்களுக்கு வாழ்த்தை தெரிவிப்பது

By Siva
|

ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு வசதிகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு வசதியாக வாழ்த்துக்களை பரிமாறி கொள்ளும் வசதியை மிக விரைவில் கொண்டு வரவுள்ளது. சமீபத்தில் கொண்டு வந்த 'போக்' வசதியை அடுத்து இந்த வாழ்த்து வசதி ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது

ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய வசதி நண்பர்களுக்கு வாழ்த்தை தெரிவிப்பது

இந்த வசதி தற்போது பிரிட்டன், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சோதனை வடிவில் உள்ளது. அனேகமாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் 10வது ஆண்டின் தொடக்க நாளில் இந்த புதிய வசதி பயனாளிகளுக்கு அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது.

இந்த புதிய வசதி 'ஹலோ' என்ற பட்டனை அழுத்தினால் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஹலோ பட்டனை அழுத்தினால் உங்கள் நண்பருக்கு நீங்கள் வாழ்த்து கூறும் வசதி தென்படும் வகையில் இருக்கும் என்றும் தெரிகிறது.

ஏற்கனவே ஃபேஸ்புக் அறிமுகம் செய்த 'ரியாக்சன்' வசதி போலவே இந்த வாழ்த்து வசதியும் இருக்கும் என்றும், மேலும் தவறாக இந்த பட்டனை பயன்படுத்திவிட்டால் அதை டெலிட் செய்வதற்கும் வசதி இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

"இனி" பேஸ்புக், ட்விட்டர் மூலம் சமையல் எரிவாயு பதிவு செய்யலாம்.!

மேலும் இந்த புதிய வாழ்த்துக்கள் வசதி, "போக்" அம்சத்துடன் ஒப்பிடும்போது சில நோக்கங்களைக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது, ஆனாலும் இந்த வசதி குறித்து தற்போது முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை என்பதும், போக் வசதியை போலவே இந்த வசதியும் இருக்கும் என்பதே தற்போதைய நிலை என்றும் கூறப்படுகிறது

போக் வசதி போலவே இன்னும் பல வசதிகளை எதிர்பார்க்கும் ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு இந்த வசதி திருப்தி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் உங்கள் நண்பர்களின் நண்பர்களுக்கு போக் வசதி உதவுவது போலவே இந்த வசதியும் உதவி செய்யும் என தெரிகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook users will soon be able to send a variety of 'greetings to interact with their friends in a unique way.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X