அரசியல் விளம்பரங்களை முறைப்படுத்திய பேஸ்புக் நிறுவனம்: எதற்கு?
இந்த புதிய மாற்றங்களின் மூலமாக விளம்பரங்களின் பட்ஜெட் என்ன என்பதை அதை பாரக்கும் பயனர்களுக்கும், பயனர்களின் வயது மற்றும் பாலினமும் வெளிப்படுத்தப்படும்.
சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் தனது தளத்தில் விளம்பரங்களை செயல்படுத்தும் முறைகளில் சில மாற்றங்களை செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது. பேஸ்புக் செய்யவுள்ள முக்கிய மாற்றம் என்னவென்றால், துப்பாக்கி உரிமை, கருகலைப்பு, குடியேற்றம், வெளியுறவு கொள்கை போன்றவற்றை உள்ளடக்கிய நேரிடை அல்லது மறைமுக அரசியல் சார்ந்த விளம்பரங்களில் உள்ள 'விளம்பரம் அளித்தவர்'( 'Paid for by') என்ற சமீபத்தில் அறிவிக்கப்பட்ட லேபிள் தான்.

இந்த புதிய மாற்றங்களின் மூலமாக விளம்பரங்களின் பட்ஜெட் என்ன என்பதை அதை பாரக்கும் பயனர்களுக்கும், பயனர்களின் வயது மற்றும் பாலினமும் வெளிப்படுத்தப்படும்.
இந்த தகவல்களின் மூலம் பயனர்கள் விளம்பரம் தருபவர்களின் அரசியலை பற்றி சிந்திக்க உதவுவது மட்டுமில்லாமல், எந்தெந்த இடங்களில் இருந்து பயனர்கள் அதிதமாக இந்த விளம்பரங்களை பார்க்கிறார்கள் எனவும் பயனர்கள் அறிந்துகொள்ள முடியும். மேலும அந்த விளம்பரம் வெளியிடப்பட்டு 7 வருடங்கள் வரை facebook.com/politicalcontentads என்ற இணைய முகவரிக்கு சென்று அனைத்து தகவல்களையும் பயனர்கள் பார்க்கலாம் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த புதிய கொள்கைகள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டிற்கும் பொருந்தும்.

சமூகவலைதளங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு முழுமையான தடை விதிக்கவேண்டும் என பெரும்பாலான அரசியல் வல்லுநர்கள் கோருகின்றனர். இதன் மூலம் 2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக், டிவிட்டர், ரெட்டிட், டம்ப்ளர் போன்ற சமூகவலைதளங்களில் போலியான விளம்பரங்கள் மற்றும் செய்திகள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதை இனி நடக்காமல் தவிர்க்கலாம்.இதே விளம்பர பிரச்சாரங்கள் யூ.கே வில் நடந்த பிரிக்ஸிட் வாக்கெடுப்பிலும் பிரதிபலித்தது.
இவை குறித்து பேஸ்புக் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில்,
"பேஸ்புக்கில் அரசியல் விளம்பரங்களை தடை செய்வது என்பது தகுதியற்ற அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு சாதகமாகிவிடும். தொலைக்காட்சி மற்றும் பத்திரக்கைகளுடன் ஒப்பிடும் போது இந்த டிஜிட்டல் பிரச்சாரம் மலிவு விலையில் கிடைக்கும் என்பதால் பொராளாதார ரீதியில் பலமாக இல்லாத வேட்பாளர்கள் தங்கள் தொகுதி வாக்காளர்களை எளிதாக அணுக உதவியாக இருக்கும். மேலும் விளம்பரங்கள் மூலம் முக்கிய சவால்களை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவும், பொதுவான பிரச்சனைகளுக்காக விவாதம் செய்யும் தளமாகவும் பேஸ்புக் இருக்கும்."

அரசியல் விளம்பரங்களை யார் தருகிறார்கள் என்பதை பயனர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வசதிக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் கூறினாலும், அந்த ஒரு சமூகவலைதள நிறுவனம் மட்டுமே இதை செய்வதில்லை. அமெரிக்காவில் தேர்தல் வேட்பாளர்களை அறிந்து குறித்து வைத்துக்கொள்ள டிவிட்டர் 'learn more' எனும் பட்டனை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. பேஸ்புக்கின் இந்த புதிய வசதியானது 'Ads Transparency Center' என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்த ஆண்டின் கடைசியில் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications