தம்பதியின் பேஸ்புக் படத்தை திருடி ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய மர்மநபர்.!
மேலும், இதுபோன்று தொடர்ச்சியாக பேஸ்புக் வாயிலாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இதிலிருந்து நாம் சற்று எரிச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டும். தற்போது நமது அனுமதியில்லாமலும் அடுத்தவர்கள் ஆப
பேஸ்புக்கில் ஒருவர் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இருந்த போதிலும் அவரின் மனைவியின் புகைப்படத்தை ஒருவர் ஆபாசமாக மார்பிங் செய்து, மெஸ்சேஞ்சரில் அனுப்பி மிரட்டியுள்ளார்.

மேலும், இதுபோன்று தொடர்ச்சியாக பேஸ்புக் வாயிலாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இதிலிருந்து நாம் சற்று எரிச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டும்.
தற்போது நமது அனுமதியில்லாமலும் அடுத்தவர்கள் ஆபாசமாக புகைப்படங்களை சித்தரிப்பது என்பது மிகுந்த கவலையளிக்க கூடிய விஷியமாக இருக்கின்றது.

பெண் பெயரில் போலி கணக்கு:
சென்னை பெருங்குடியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவருக்கு, அம்சத் பேகன் - சென்னை பொண்ணு என்ற பெயரில் உள்ள மர்மநபர் ஒருவன் பேஸ்புக்கில் நண்பனாகி உள்ளான்.
இந்த நிலையில், அண்மையில் தனது குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, ஓட்டுநர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சில நாட்கள் கழித்து, அம்சத் பேகன் கணக்கை இயக்கும் நபர், மெசெஞ்சர் வாயிலாக ஒரு புகைப்படத்தை ஓட்டுநருக்கு அனுப்பி வைத்துள்ளான்.

மனைவியின் ஆபாச புகைப்படம்:
அதில், தனது குடும்ப புகைப்படத்தில் இருக்கும் மனைவியின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார் ஓட்டுனர். உடனடியாக தனது மனைவியுடன், காவல் ஆணையரகம் சென்ற அவர், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.

பேஸ்புக் புகைப்படங்களால் வந்த வினை:
சித்தரித்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு தங்களை மிரட்டுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும், இதேபோல் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டுவதாகவும் பிரபாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாலியல் தொந்தரவு செய்ய:
பாலியல் தொந்தரவுக்காகவே அந்த மர்ம நபர் இவ்வாறு செய்வதாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தங்களை போல் வேறு யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே புகார் அளிக்க முன் வந்திருப்பதாகவும், மர்மநபரைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பேஸ்புக்கில் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சைபர் கிரைம் போலீசார்:
நாம் இதுபோன்ற செயல்கள் நடந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாட வேண்டும். பிரச்னைகளை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்தால் ஒன்றும் நடக்காது, வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் உடனடியாக நாம் காவல் துறை உதவியை நாடுவது தான் சரி.


Click it and Unblock the Notifications