விரைவில் ஸ்மார்ட் போனைக் களமிறக்கும் பேஸ்புக்!

Posted By: Karthikeyan
விரைவில் ஸ்மார்ட் போனைக் களமிறக்கும் பேஸ்புக்!

விரைவில் பேஸ்புக் தனது புதிய ஸ்மார்ட் போனைக் களமிறக்கப் போகிறது என்ற வதந்தி இணைய தளங்களில் பார்க்க முடிகிறது. அதாவது தைவானைச் சேர்ந்த எச்டிசி நிறுவனத்தோடு இணைந்து, தனது சொந்த ஆன்ட்ராய் இயங்குதள வெர்சனில் இந்த புதிய போனைக் களமிறக்கப் போவதாக பல தகவல்கள் தெரிவித்திருந்தன.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேஸ்புக்கின் தலைமை இயங்குனர் மார்க் சுக்கர்பெர்க் கூறும் போது மேற்சொன்ன தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். மேலும் பேஸ்புக் விரைவில் தனது ஸ்மார்ட் போனை களமிறக்காது என்றும், ஹார்ட்வேர் பக்கமே பேஸ்புக்கின் கவனம் இருப்பதாகவும், ஆனால் மொபைல் அனுபவத்தை மேம்படுத்துவதில் தமது நிறுவனம் அக்கறையுடன் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் பேஸ்புக் பொருளாதார ரீதியாக வெற்றி பெறமுடியாமல் தவித்து வருகிறது. பங்குச் சந்தையில் பேஸ்புக்கின் பங்குகளின் மதிப்பும் வெகுவாக குறைந்து வருகின்றன. அதாவது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் பேஸ்புக்கிற்கு 157 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டம் ஏற்பட்டிருப்பதாக பேஸ்புக் அறிவித்திருக்கிறது.

எட்டு வயதாகும் இந்த பேஸ்புக் மார்க் சுக்கர் பெர்க் என்பவரால் அவரது படுக்கை அறையில் தொடங்கப்பட்டது. அப்படிப்பட்ட நிறுவனம் மிக வேகமாக மக்களைக் கவர்ந்தது. அதே நேரத்தில் அமெரிக்காவின் உச்சத்திற்கு சென்றது. கடந்த மே 18 அன்று இந்த நிறுவனம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனில் இருப்பதாகவும் அதனால் முதலீட்டாளர்கள் பேஸ்புக்கில் முதலீடும் செய்ய தயங்குவதாகவும் தகவல்கள் வருகின்றன.

எது எப்படியோ மிகப் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் மொபைல் களத்தில் இறங்கும் போது, பேஸ்புக்கும் சும்மா இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot