ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸுடன் இணையும் ஃபேஸ்புக்!!

Written By:

ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸுடன் இணையும் ஃபேஸ்புக்!!

ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுடன் இணைந்து புதிய சேவையை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஃபேஸ்புக் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஃபேஸ்புக், மொத்தம் 14 நாடுகளில் உள்ள 18 தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து சலுகை விலையில் தனது மெசஞ்சரை விரைவில் வெளியிடவுள்ளது. இதற்காக இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல்லுடன் கைகோர்க்கிறது ஃபேஸ்புக்.

இதற்காக ஏற்கெனவே இவ்விரு நிறுவனங்களும் தங்களது திட்டங்களை வெளியிட்டுள்ளன. ஏர்டெல், பிப்ரவரி 15லிருந்து இதை அமல்படுத்திவிட்டது. அதாவது 500 எம்பி என்ற அளவுவரை ஃபேஸ்புக்கை இலவசமாக பயன்படுத்தலாமாம்.

இதேபோல் Rcom நிறுவனமும் தனது ஃபேஸ்புக் திட்டத்தை அறிவித்துள்ளது. அளவற்ற ஃபேஸ்புக் பயன்பாட்டை மாதத்திற்கு வெறும் ரூ.16க்கே பெறலாம் என்பதே!

பிளாக்பெர்ரி Z10 போனுக்கான 'ஆன்லைன் டீல்ஸ்'....

Gadgets Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot