Home
Social media

அமெரிக்காவுக்கு வெளியே புதிய அலுவலகம் திறந்த பேஸ்புக்!

By Karthikeyan
அமெரிக்காவுக்கு வெளியே புதிய அலுவலகம் திறந்த பேஸ்புக்!

உலகெங்கிலும் மக்களை தனது பக்கத்தில் கட்டிப் போட்டிருக்கும் சமூக வளைத்தளமான பேஸ்புக் இதுவரை அமெரிக்காவில் மட்டுமே அலுவலகங்கள் வைத்துள்ளது.

இப்போது முதன் முதலாக அமெரிக்காவிற்கு வெளியே தனது அலுவலகத்தைத் திறந்திருக்கிறது பேஸ்புக். அதாவது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தனது பொறியாளர் அலுவலகத்தை நிறுவியிருக்கிறது ஃபேஸ்புக்.

பேஸ்புக்கின் லண்டன் அலுவலகத்தின் தலைவர் பிலிப் கூறும்போது," பேஸ்புக் லண்டனில் தனது அலுவலகத்தைத் திறந்திருப்பதால் பேஸ்புக்கிறக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் லண்டன் பேஸ்புக்கிற்கு ஏற்ற நகரம் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

சிறிய குழுவாக லண்டனில் ஆரம்பிக்கும் பேஸ்புக் விரைவில் மிகப் பெரிய வளர்ச்சி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லண்டன் பேஸ்புக் குழுவுடன் இணைந்து பணிபுரிய புதிதாக 22 பணியாளர்கள் தேவை என்றும் கூறியிருக்கிறார்.

உலகச் சந்தையை மையமாக வைத்தே பேஸ்புக் தனது அலுவலகத்தை லண்டனில் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக ஆசியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் தனது சேவையை அதிக அளவில் பெரிதுபடுத்த இந்த லண்டன் அலுவலகத்தை பேஸ்புக் தொடங்கியிருக்கிறது.

கடந்த டிசம்பர் முதல் மே மாதம் வரை அமெரிக்காவில் பேஸ்புக்கின் வளர்ச்சி 0.86 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில் ஜப்பானில் 66 சதவீதமும் பிரேசிலில் 54 சதவீதமும் மற்றும் இந்தியாவில் 20 சதவீதமும் இருந்தது.

எனவே இந்த வளர்ச்சியை அதிகரிக்க பேஸ்புக்கிற்கு அமெரிக்காவிற்கு வெளியிலும் அலுவலகங்கள் தேவைப்படுகின்றன. அதற்காகத்தான் இந்த புதிய லண்டன் அலுவலகத்தை பேஸ்புக் தொடங்கியிருப்பதாக கருத்துக்கள் நிலவுகின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X