Home
Social media

புதிய, எளிய வடிவில் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீட்

சுடச்சுட செய்திகள் புகைப்படங்கள், வீடியோ, ஜிஃப் பைல், மற்றும் லிங்குகள் நியூஸ் ஃபீடில் கிடைக்கும்.

By Siva

நாம் ஃபேஸ்புக்கை எப்போது திறந்து பார்த்தாலும் அதில் நம் கண் முன் முதலில் தோன்றுவது நியூஸ் ஃபீட் என்னும் செய்தி இணைப்புகள் தான். சுடச்சுட செய்திகள் புகைப்படங்கள், வீடியோ, ஜிஃப் பைல், மற்றும் லிங்குகளுடன் கிடைக்கும். செய்தி வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம் என்பது குறிப்பிடத்தக்கது

புதிய, எளிய வடிவில் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீட்

ஏற்கனவே ஃபேஸ்புக்கில் உள்ள நியூஸ் ஃபீட் எளிய முறையில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இருந்தாலும் தற்போது மேலும் புதிதாக அதை ஃபேஸ்புக் அப்டேட் செய்துள்ளது. மிக எளிதாக அனைவரும் நியூஸ் ஃபீடில் இணைக்கும் வகையில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஃபேஸ்புக்கில் பிளாக் பக்கத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, அவை பயனாளிகளுக்கு எந்த வகையில் உபயோகமாக இருக்கும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சிறந்த உரையாடல்கள்

சிறந்த உரையாடல்கள்

ஃபேஸ்புக்கில் உள்ள மிகச்சிறந்த அம்சமே கமெண்ட் பாக்ஸ் மூலம் ஒருவருக்கு ஒருவர் உரையாடி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதுதான். அதேபோல் ஒவ்வொரு கமெண்ட்களுக்கும் பதில் அளிக்கும் வகையிலும் எளிதான முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன

வாசிக்கும் திறனை அதிகப்படுத்துவது:

வாசிக்கும் திறனை அதிகப்படுத்துவது:

ஃபேஸ்புக் நியூஸ் ஃபீட் பக்கத்தை உடனுக்குடன் புதிய செய்திகளை பகிர்ந்து வருவதால் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

எனவே இதன் மூலம் அதிக வாசிப்புத்திறன் பயனாளிகளுக்கு கிடைக்கின்றது. மேலும் செய்திகளை அப்டேட் செய்யும்போது கண்ணை கவரும் வகையில் வண்ணங்களில் இருப்பதால் எளிதில் அனைவரையும் கவர்கிறாது

மேலும் நாம் படிக்கும் செய்தியை நமது நண்பர்களுக்கு ஷேர் செய்யும் வசதியும், லைக் செய்யும் வசதியும், கமெண்ட் செய்யும் வசதியும் இருப்பதால் பயனாளிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் உள்ளது

எளிமையான வழிநடத்துதல்

எளிமையான வழிநடத்துதல்

மேலும் ஃபேஸ்புக் ஒரு செய்தியை வெளியிட்டு அதன் விரிவாக்கத்தை எங்கு சென்றால் படிக்கலாம் என்பது குறித்த வழிநடத்தலையும் மிகச்சரியாக செய்கிறது.

அதாவது ஒரு குறிப்பிட்ட செய்தியின் விளக்கம் கிடைக்கும் லிங்க்கை அந்த செய்தியின் அருகிலேயே வைத்திருப்பதால் பயனாளிகளுக்கு எளிமையாக பல புதிய செய்திகள் விரிவாக கிடைக்கின்றது.

அந்த விரிவான செய்தியில் லைக், கமெண்ட் ஆகியவை செய்துவிட்டு மேலும் மீண்டும் நியூஸ் ஃபீட் திரும்பவும் மிக எளிமையாக வழிநடத்தலை தருகிறது. அதாவது ஒரெ ஒரு முறை பேக் பட்டனை அழுத்தினால் போதும்

இந்த புதிய வடிவ ஃநியூஸ் டிசைன் அனைவரையும் கவர்ந்துள்ளதால் செய்திகள் வாசிக்கும் வழக்கமுடையவர்கள் அதிகம் இதை பயன்படுத்துவார்கள் என்பது உறுதி

Best Mobiles in India

English summary
In order to make News Feed more conversational and easier to read and navigate, Facebook is making a few updates to its design over the coming weeks.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X