இந்தியாவில் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் அறிமுகம்

By Siva
|

ஃபேஸ்புக் நிறுவனம் குறைந்த வேக இண்டர்நெட் பயனாளிகளுக்கு என உருவாக்கிய ஃபேஸ்புக் லைட் மெசஞ்சர் செயலியை தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள ஃபேஸ்புக் பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இந்தியாவில் ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் அறிமுகம்

ஆண்ட்ராய்ட் போன் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மெதுவான இண்டர்நெட் அதாவது சராசரிக்கும் குறைவான வேகத்தை கொண்ட இண்டர்நெட் பயனாளிகளுக்கும் சேவை செய்யும் வசதிக்காக மெசஞ்சர் லைட் என்ற புதிய செயலியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்தது. மெதுவான இண்டர்நெட் கொண்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த செயலி காணப்பட்டது.

10MBக்கும் குறைவான திறன் கொண்ட இந்த மெசஞ்சர் லைட் செயலி, ஒரிஜினல் மெசஞ்சரில் உள்ள அதே வசதிகளான டெக்ஸ்ட் மெசேஜ்களள அனுப்ப, பெற மற்றும் புகைப்படங்கள், இண்டர்நெட் லிங்குகள், எமோஜிகள் மற்றும் ஸ்டிக்கரை அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய செயலி வாய்ஸ்கால், ஆக்டிங் நெள இண்டிகேட்டர் போன்றவற்றை கொண்டுள்ளதோடு, ஃபேஸ்புக் குரூப் உறுப்பினர்களை சேர்க்கவும், நீக்கவும் கூடிய ஆப்சன்களையும் பெற்றுள்ளது.

இந்த மெசஞ்சர் லைட் ஏற்கனவே வியட்நாம், நைஜீரியா, பெரு, துருக்கி, ஜெர்மனி, ஜப்பான், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கி வருகிறது.

இந்த மெசஞ்சர் செயலி ஏற்கனவே ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் சுமார் 5,000,000,000 பேர் டவுன்லோடு செய்துள்ளனர். மேலும் அதுமட்டுமின்றி அவர்களில் 46,056,597 பயனாளிகள் ஐந்துக்கு நான்கு ஸ்டார்கள் ரேட்டிங் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
For places where mobile internet connections are slow, Facebook has rolled out the "lite" version of its Messenger app in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X