Home
Social media

பேஸ்புக்கிற்கு, பேஸ்புக் லைட் சரியான மாற்றா.?

முகநூல் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பேஸ்புக் லைட் பேஸ்புக் ஆப்பினுக்கு சரியான மாற்றா? பயனாளர்களால் பேஸ்புக் லைட் ஆப் விரும்பப்படுகிறதா அவை குறித்து அலசுகிறது இந்த பதிவு.

By Ilamparidi

சமூக வலைத்தளங்களில் முகநூல் நிறுவனம் குறிப்பிடத்தகுந்த ஒன்று.இது உலகு முழுமைக்கும் பிற சமூக வலைத்தளங்களை விட அதிகப்படியான பயனாளர்களைக் கொண்டுள்ளது.மேலும் இந்நிறுவனம் வழங்கக்கூடிய புதிய வசதிகளால் இதன் பயனாளர்கள் எண்ணிக்கையானது அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.

குறுஞ்செய்தி முறைகளையெல்லாம் தவிர்த்தது உலகின் ஏதோ ஊர் மூலையிலுள்ளவர்களைத் தொடர்புக்கொள்ளவும் விரைவாக செய்திகளைத் தெரிந்துகொள்ளவும் மேலும் சமூக நிகழ்வுகள் குறித்து தமது கருத்துக்களை பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை இது வழங்குகிறது.

மேலும்,தனது பயனாளர்களுக்காக அவ்வப்போது இந்நிறுவனம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.அந்த வகையில் சிறிது காலத்திற்குமுன் லைவ் வீடியோ,பேஸ்புக் லைட் உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது.அதில் பேஸ்புக் லைட் பேஸ்புக்கிற்கு சரியான மாற்றா என பார்ப்போம்.

டவுன்லோட்  சைஸ்:

டவுன்லோட் சைஸ்:

பேஸ்புக் ஆப்பின் அளவானது இன்ஸ்டால் செய்வதற்கு முன் 71.8 எம்பியாகவும்,இன்ஸ்டால் செய்த பின் 195 எம் பி யாகவும் அதிகரிக்கும்.ஆனால் பேஸ்புக் லைட் ஆப்பின் அளவானது இன்ஸ்டால் செய்வதற்கு முன் 1 எம்பியாகவும் இன்ஸ்டால் செய்தபின் 2.82 எம்பி அளவாகவும் இருக்கும்.ஆகவே மொபைலில் குறைவான அளவுள்ள வகையில் பேஸ்புக்கினை பயன்படுத்த இது ஏற்றதாகும்.

ரேம்:

ரேம்:

பேஸ்புக்கின் ஒரிஜினல் செயலியானது 150-300 எம் பி அளவுள்ள ரேமினைக்கொண்டு செயல்படும்.அதேபோல் பேஸ்புக் லைட் செயலியானது 50-150 எம் பி அளவுள்ள ரேமினைக்கொண்டே பின்னணியில் செயல்படும்.

ஒப்பீடு:

ஒப்பீடு:

பேஸ்புக் ஆப்புடன் பேஸ்புக் லைட் ஆப்பினை ஒப்பிடுகையில் பேஸ்புக் ஆப்பே அதிகப்படியான வசதிகளைக் கொண்டிருக்கும்.இந்த ஆப் ஆனது எடுத்துக்கொள்கிற ஸ்டோரேஜ்,மற்றும் டேட்டா ஆகியவைகளுக்கு ஏற்றாற்போல் அதில் எல்லா வசதிகளும் அடங்கியிருக்கும்.

பேஸ்புக் லைட் ஆப்பானது குறைந்த ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா ஆகியவற்றில் செயல்படக்கூடியது.எல்லா வசதிகளும் இதில் அடங்கியிருக்காவிட்டாலும் குறைந்த டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக்கொண்டு பயன்படுத்த ஏற்றது.

சாட்:

சாட்:

ஆச்சரியமளிக்கத்தக்க வகையில் பேஸ்புக் லைட் ஆப் சாட் வசதியினைக் கொண்டுள்ளது.ஆனால் பேஸ்புக் ஆப் சாட் வசதியினைக் கொண்டிருக்காது.அதற்கென நாம் மெசென்ஜர் ஆப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டியிருக்கும்.

நோட்டிபிகேஷன்:

நோட்டிபிகேஷன்:

பேஸ்புக் லைட் ஆப் தேவையற்ற அலர்ட்ஸ்,பாப் அப் போன்றவற்றை தடை செய்கிற காரணத்தால் எவ்வித இடையூறும் இன்றி பயன்படுத்த இயலும்.

வேகம்:

வேகம்:

பேஸ்புக் லைட் ஆப் ஆனது ஒரிஜினல் பேஸ்புக் ஆப் செயல்படக்கூடிய நேரத்தினை விட விரைவாகச் செயல்படுகிறது.பேஸ்புக் ஆப் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு செயல்படுகிறதோ அதை விட சரியாக பாதி நேரத்தில் இது அதிகப்படியான பக்கங்களை கடக்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா அசத்தல் : பழைய மாடல்களில் புதிய நோக்கியா கருவிகள்.!

Best Mobiles in India

English summary
Facebook Lite a worthy Facebook replacement? Let's find out.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X