ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை நூலிழையில் இழந்த ஃபேஸ்புக்

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஏலம் எடுக்க முனைந்த ஃபேஸ்புக்கின் முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டியது. இதுவொரு தைரியமான முடிவு

By Siva
|

சமுக வலைத்தளங்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஃபேஸ்புக், அவ்வப்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது சலுகைகளை செய்து தரும் நிலையில் தற்போது மேலும் சலுகையை கொடுக்க முன்வந்து அதில் தோல்வி அடைந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை நூலிழையில் இழந்த ஃபேஸ்ப

இந்தியாவில் மிக அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக், இந்திய வாடிக்கையாளர்களுக்காக செய்த ஒரு முயற்சி $600 மில்லியன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதுதான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஒளிபரப்பு உரிமை

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஏலம் எடுக்க முனைந்த ஃபேஸ்புக்கின் முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டியது. இதுவொரு தைரியமான முடிவு. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஃபேஸ்புக்கில் ஸ்ட்ரீம்லைவ் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை இந்நிறுவனம் ஏலம் எடுக்க முயன்றது.

ஆனால் தொலைக்காட்சி, டிஜிட்டல் உள்பட அனைத்து உரிமைகளை ரூ.16347.50 கோடிக்கு ஸ்டார் இந்தியா ஐந்து வருடங்களுக்கு ஏலம் எடுத்ததால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமை கிடைக்காமல் போனது.

ஜியோ LTF மாடல்களுக்கு 20% டேட்டாவுடன் மேலும் சில சலுகைகள்ஜியோ LTF மாடல்களுக்கு 20% டேட்டாவுடன் மேலும் சில சலுகைகள்

இருப்பினும் ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் அவர்களின் இந்த முயற்சி பாராட்டும் வகையில் உள்ளது. விளையாட்டு துறைக்காக அவர் இத்தனை கோடியை முதலீடு செய்ய முன்வந்தது உண்மையிலேயே பெரிய விஷயம்தாம்

ஒருவேளை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஐபிஎல் போட்டியின்ஹ் டிஜிட்டல் உரிமை கிடைத்திருந்தால் உண்மையிலேயே மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்திருக்கும்.

இருப்பினும் ஃபேஸ்புக் பல ஒரிஜினல் வீடியோக்களை லைவ்ஸ்டீர்ம் மூலம் தற்போது ஒளிபரப்பி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறாது.

கடந்த பிப்ரவரி மாதம் மெக்சிகோ கால்பந்து லீக் போட்டிகளின் 46 போட்டிகளை லைவ்ஸ்டீரீம்கள் மூலம் ஒளிபரப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை ஃபேஸ்புக் இழந்திருந்தாலும், மீண்டும் இதுபோன்ற கிரிக்கெட் போட்டிகளை எதிர்காலத்தில் நிச்சயம் உரிமம் எடுத்து வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook has just demonstrated its big ambitions for sports streaming, even as it failed to land a deal for a high-profile cricket tournament.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X